சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூரி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க காவல் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ரொகிங்யா அகதி சிறுவர்களின் கல்விக்கான உரிமையை மறுக்கின்றது பங்களாதேஸ்!
பங்களாதேசின் அகதிமுகாம்களில் உள்ள மியன்மாரின் ரொகிங்யா இன சிறுவர்களிற்கு கல்வி கற்பதற்கான உரிமை மறுக்கப்படுவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அகதி சிறுவர்களிற்கு கல்வி கற்பதற்கு உள்ள உரிமையை பங்களாதேஸ் அதிகாரிகள் வேண்டுமென்றே மறுக்கின்றனர் என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நாங்கள் மனிதர்கள் இல்லையா?என்ற கேள்வியுடன் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்விகற்கும் வயதிலுள்ள சுமார் 40,000 சிறுவர்களிற்கான உரிமை மறுக்கப்படுவது குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. உரிய கல்வியில்லாத நிலையில் இந்த சிறுவர்கள் இளைஞர் யுவதிகள் துஸ்பிரயோகங்கள் குற்றங்கள் வறுமை ...
Read More »கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு அணியாகத்தான் இருக்குமே ...
Read More »விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல!-சுவிட்சர்லாந்து நீதிமன்றம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது. 1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே ...
Read More »ஈரான் மிரட்டல்: டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் ஆலோசனை!
ஈரான் நாட்டின் மிரட்டல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் கலந்தாலோசித்தனர். ஈரான் நாட்டுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. அமெரிக்கா நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியை விரைவு படுத்தியது. சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது. அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது எனவும், எதிரிகளின் சதி முறியடிக்கப்படும் எனவும் ...
Read More »கடத்தப்பட்ட விவகாரம்: தீவிரமாக கவனம்!-அரசாங்கம் அறிவிப்பு!
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணிபுரியும் சிறிலங்கா ஊழியர் ஒருவர் தொடர்பாக கூறப்படும் குற்றச் சம்பவம் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய நவம்பர் 25 ஆம் திகதி இந்த விவகாரம் குறித்து உடனடியான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ மற்றும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், தூதுவராலய செயற்பாடுகளுக்கான பிரதித் தலைவர் ஆகியோரை சந்தித்து, காவல் துறை திணைக்களத்தின் குற்றப் ...
Read More »சுவிஸ் தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம்!
அஜித் பிரசன்னா என்ற முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துக்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரை காவல் துறையிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், சுவிட்ஸ்ர்லாந்து தூதுவர் எமது தாய்நாட்டின் பெயரை கெடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
Read More »13ஆவது அரசியலமைப்பு குறித்த இந்திய பிரதமரின் அறிப்பை ஏற்கின்றோம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதால் அவை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவொன்றை எடுக்க முடியும் என்று முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வெளிநாடொன்றுக்கான முதலாவது விஜயமாக இந்தியாவிற்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, விஜயத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இருதரப்புப் ...
Read More »இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கூட்டமைப்பு!
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் ...
Read More »சுரிநாம் நாட்டை ஆளும் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!
சுரிநாம் நாட்டு தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்சுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள சிறிய நாடான சுரிநாம், 1975 ம் ஆண்டு நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்நாட்டின் தற்போதைய அதிபர் தேசி பவுட்டர்ஸ் (வயது 74). 1980ம் ஆண்டு சுரிநாம் நாட்டில் ராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது ஆட்சியை பிடித்த பவுட்டர்ஸ் தற்போது வரை சுரிநாம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். போதைப்பொருட்கள் வழக்கிலும் குற்றவாளி என நிருபிக்கப்பட்டுள்ள இவர் மீது ...
Read More »