யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளார். பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இன்றைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கொரோனா பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்துக்கு முதலிடம்!
மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை சிறப்பாக கையாண்ட நாடுகளின் பட்டியலில், நியூஸிலாந்து முதலிடம் பிடித்துள்ளது. சிட்னியை தலைமை இடமாகக் கொண்ட லோவி நிறுவனம் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட நாடுகள் பற்றிய கணக்கெடுப்பை நடத்தியது. 98 நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து இந்த நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் நோய் கட்டுப்பாடு, அரசியல் செயல்பாடு, பொருளாதார நிலை பராமரிப்பு ஆகியவையும் கண்காணிக்கப்பட்டது. இதில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையை சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்து ...
Read More »ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்திற்கு பற்றாக்குறை!
ஜேர்மனியில் ஏப்பிரல் வரை கொரோனா தடுப்புமருந்திற்கு தட்டுப்பாடு காணப்படும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். தடுப்புமருந்திற்கான தட்டுப்பாடு காரணமாக மிகவுமசவாலான பத்து வாரங்களை நாங்கள் எதிர்கொள்ளப்போகின்றோம் என சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா வைரஸ் தடுப்பு மருந்திற்கான தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் மருந்துதயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியாளர்கள் அரசியல்வாதிகளுடன் தடுப்பு மருந்து தொடர்பான உச்சிமாநாட்டை நடத்தவுள்ளார். இன்றைய மாநாட்டின் போது மருந்து உற்பத்தி தொழில்துறைக்கு எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்பது குறித்து ஆராய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ...
Read More »மசூதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார்- 16 வயது இளைஞர் சிங்கப்பூரில் கைது
2019 இல் நியுசிலாந்தில் மசூதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்று தாக்குதல்களை முன்னெடுக்கப்பட்ட பதின்ம வயது இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிறைஸ்சேர்ச் மசூதி படுகொலைகள் நினைவுதினத்தின் போது ( மார்ச்) அவர் இரண்டு மசூதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ள கைதுசெய்யப்பட்ட இளைஞன் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் வேறு எவரினதும் உதவியின்றி தன்னை தானே தீவிரவாதமயப்படுத்தியுள்ளார்,என தெரிவித்துள்ள சிங்கப்பூர் அதிகாரிகள் இஸ்லாம் மீதான வெறுப்பும் வன்முறை மீதான காதலும் இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ...
Read More »கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயின் தீவிரதன்மையை குறைக்கும் திறனை மாத்திரம் கொண்டவை
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயின் தீவிரதன்மையை குறைக்கும் திறனை மாத்திரம் கொண்டிருப்பதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களிற்கே தடுப்பு மருந்தினை வழங்கவுள்ளதாக பொதுமக்கள் சுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சுசி பெரேரா தெரிவித்துள்ளார். தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களிற்கு நோய் அறிகுறிகள் குறைவாக காணப்படு;ம் இதன் காரணமாக உயிரிழப்புகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார். 20வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கர்ப்பிணிப்பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ள சுசி பெரேரா இந்த பிரிவில் அடங்குபவர்களிற்கு கொரோனா ...
Read More »நிலவில் நீல் ஆம்ஸ்ட்ரோங்கின் கால் தடத்தை பாதுகாக்க சட்டம்!
விண்வெளியில் மனிதர்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையிலான சட்டத்தை அமெரிக்க அரவு பிறப்பித்துள்ளது. கடந்த 1969ஆம் ஆண்டு அப்பல்லோ 11( Apollo 11) விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) நிலவில் முதல்முறையாக தனது கால் தடத்தை பதித்தார். இச் சாதனையின் நினைவுகளை பாதுகாக்கும் வகையில் கடந்தாண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், விண்வெளியில் முதல்முறையாக மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட தடயங்கள், பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், போன்றவற்றை பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
Read More »யாழ்.மாநகர சபை வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய வரவு – செலவுத்திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகப் பதவி வகித்த இ.ஆர்னோல்ட் சமர்ப்பித்த 2021ஆம்ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து அவர் பதவி இழந்தார். அதன் பின் நடைபெற்ற மேயர் தெ ரி வி ல் ...
Read More »குருந்தூரில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன!
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவுகாவல் துறை நிலையத்தில் 27.01.2020 இன்று முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார். அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும் ரவிகரன் அவர்கள் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார். இந்த முறைப்பாட்டில் ரவிகரன் அவர்களுடன் ரைதுறைப்பற்று பிரதேசசபை ...
Read More »டொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியனாக இருப்பார்
டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகிய நிலையில், முன்னாள் அதிபர் அலுவலகத்தை புளோரிடாவில் திறந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்பதற்கு முன் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி, புளோரிடாவில் உள்ள பாம் பீச்சில் உள்ள அவருடைய கோல்ஃப் கிளப்பிற்கு சென்றார். அமெரிக்காவின் 45-வது அதிபரான டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபருக்கான அலுவலகத்தை அங்கு திறந்தார். இந்த நிலையில் அலுவலகம் சார்பில் டொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியன் எனத் தெரிவித்துள்ளது. டொனால்டு டிரம்பின் டுவிட்டர் ...
Read More »நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிசிஆர் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த தயங்குகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரத்தில் அரசதரப்பையும் எதிர்கட்சிகளையும் சேர்ந்த 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ள நிலையில் கொரேனாh வைரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் மேலும் பரவுவதை தடுப்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்;டுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பிசிஆர் சோதனை விடயத்தில் அரசநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதளவும் ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...
Read More »