கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயின் தீவிரதன்மையை குறைக்கும் திறனை மாத்திரம் கொண்டவை

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் நோயின் தீவிரதன்மையை குறைக்கும் திறனை மாத்திரம் கொண்டிருப்பதால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களிற்கே தடுப்பு மருந்தினை வழங்கவுள்ளதாக பொதுமக்கள் சுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்து வழங்கப்பட்டவர்களிற்கு நோய் அறிகுறிகள் குறைவாக காணப்படு;ம் இதன் காரணமாக உயிரிழப்புகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் குறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

20வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் கர்ப்பிணிப்பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ள சுசி பெரேரா இந்த பிரிவில் அடங்குபவர்களிற்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் பாதிப்பை ஏற்படுத்துமா என உரிய ஆய்வுகள் இடம்பெறாததே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.