ஜேர்மனியில் ஏப்பிரல் வரை கொரோனா தடுப்புமருந்திற்கு தட்டுப்பாடு காணப்படும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தடுப்புமருந்திற்கான தட்டுப்பாடு காரணமாக மிகவுமசவாலான பத்து வாரங்களை நாங்கள் எதிர்கொள்ளப்போகின்றோம் என சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

இன்று கொரோனா வைரஸ் தடுப்பு மருந்திற்கான தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் மருந்துதயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியாளர்கள் அரசியல்வாதிகளுடன் தடுப்பு மருந்து தொடர்பான உச்சிமாநாட்டை நடத்தவுள்ளார்.
இன்றைய மாநாட்டின் போது மருந்து உற்பத்தி தொழில்துறைக்கு எவ்வாறான உதவிகளை வழங்கலாம் என்பது குறித்து ஆராய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் சவாலான பத்துவாரங்களை எதிர்கொள்ளப்போகின்றோம் நாங்கள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அதனை எதிர்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகளை மந்தகதியில் முன்னெடு;ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அஸ்டிராஜெனேகாவிற்கும் இடையில் மருந்து வழங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு உருவாகியுள்ள நிலையிலேயே ஜேர்மனின் சுகாதார அமைச்சரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal