நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்த தயங்குகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரத்தில் அரசதரப்பையும் எதிர்கட்சிகளையும் சேர்ந்த 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தங்களை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ள நிலையில் கொரேனாh வைரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியில் மேலும் பரவுவதை தடுப்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிசிஆர் சோதனையை முன்னெடுக்குமாறு சபாநாயகர் கேட்டுக்கொண்;டுள்ளார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பிசிஆர் சோதனை விடயத்தில் அரசநாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிதளவும் ஒத்துழைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal