டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து விலகிய நிலையில், முன்னாள் அதிபர் அலுவலகத்தை புளோரிடாவில் திறந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்பதற்கு முன் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறி, புளோரிடாவில் உள்ள பாம் பீச்சில் உள்ள அவருடைய கோல்ஃப் கிளப்பிற்கு சென்றார்.
அமெரிக்காவின் 45-வது அதிபரான டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபருக்கான அலுவலகத்தை அங்கு திறந்தார். இந்த நிலையில் அலுவலகம் சார்பில் டொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியன் எனத் தெரிவித்துள்ளது.
டொனால்டு டிரம்பின் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், இந்த அலுவலகம் டிரம்ப் அறிக்கைகளை போன்ற முக்கிய செயல்பாட்டை கவனிக்கும் எனக் கூறப்படுகிறது.