ஆஸ்திரேலி தடுப்பு முகாம் அகதிகளில் ஆண்டுதோறும் 150 பேரை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழான மீள்குடியேற்றம் நிறைவடைந்த பின்னர், நியூசிலாந்தின் சலுகையை ஆஸ்திரேலிய அரசு பரிசீலிக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. அதே சமயம், ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மற்றும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இடையேயான சந்திப்பில் இதுகுறித்த விவாதிக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம்,ஆஸ்திரேலியாவின் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மெகுல் சோக்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்
இந்தியாவில் இருந்து திடீரென டொமினிகாவுக்கு வந்த விமானம், மெகுல் சோக்சியை டொமினிகாவில் இருந்து அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கலாம் என்று தகவல் பரவியது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால், சி.பி.ஐ. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் ஆன்டிகுவாவில் தஞ்சம் அடைந்திருந்த மெகுல் சோக்சியை (வயது 62) ...
Read More »கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் குறித்து அறிக்கை கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு
கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் தொடர்பில் முறையான செயற்திட்டமொன்றைத் தயாரித்து அதனைப் பகிரங்கப்படுத்துவதுடன் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அதுகுறித்து தமக்கு அறியத்தர வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளது. கொவிட் – 19 தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமை அளித்தல் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, பல்வேறு நெருக்கடிகள் ...
Read More »கிளிநொச்சி சாந்தபுரம் கிராமம் முடக்கப்பட்டது
கிளிநொச்சியில் சாந்தபுரம் கிராமம் நேற்று தொடக்கம் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை நாட்களாக அப்பகுதியில் தொற்றாளர்கள் அதிகரித்து வந்த சூழ்நிலையிலேயே அப்பகுதி முடக்கப்பட்டது. சாந்தபுரம் கிராமத்தில் 780 குடும்பங்களைச் சேர்ந்த 2428 பேர் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More »உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும்!
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நாடுகள் அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க விரும்பின. அவற்றில் ஒன்று ஆஸ்திரேலியா. நோய்த்தொற்று உருவானது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தியது. அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகள் ...
Read More »அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்
அவுஸ்திரேலியாவின் முன்னணி நிதி ஆய்வு ஊடகமான (Financial Review) பட்டியல்படுத்தியுள்ள இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவிலிருந்து 1970-களில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து கட்டுமான துறையில் செல்வந்தராக திகழும் மகா சின்னத்தம்பி Financial Review பட்டியல்படுத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் 64 ஆவது நபராக இடம்பிடித்துள்ளார். Financial Review பட்டியல்படுத்தியுள்ள குறித்த நிதி ஆய்வு நிறுவனம் இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் மகா சின்னத்தம்பி 64 ஆவது நபராக இடம்பெற்றுள்ளதுடன்,இவரின் சொத்துப்பெறுமதி 1.78 பில்லியன் டொலர்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. ...
Read More »கனடாவில் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்
ஆரம்பத்தில் பள்ளியை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள். அப்போதே அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்கள் நாளை பிரச்சினை ஏதும் செய்துவிடக் கூடாது என்பதற்காக அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் அமெரிக்க கண்டங்களில் பல இனங்கள் வேரோடு அழிந்தன. இதேபோலத்தான் கனடா ...
Read More »யாழ். பல்கலை ஆங்கில விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி
யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிஆர் சோதனையில் விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமாகியுள்ளார்.
Read More »கிளிநொச்சியில் இரு நாட்களில் 64 பேருக்கு கொவிட் தொற்று
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் வெளிவந்த பி.சி.ஆர். முடிவுகளின்படி 64 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை, அறிவியல் நகரில் உள்ள பழச்சாறு உற்பத்தி நிறுவனம் மற்றும் சாந்தபுரம் கிராமத்திலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் தொற்று ஏற்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுகாதார நடைமுறை களைக் கவனத்தில் எடுத்து நடந்து கொள்ளாதவர்கள் என்றே கூறப்படுகின்றது. நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Read More »சீன அரசுக்கு எதிராக போராடியதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை
சீன அரசுக்கு எதிராக போராடியதால் ஹாங்காங் பத்திரிகை அதிபருக்கு 14 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இதன் உரிமையாளர் ஜிம்மி லாய். இந்த செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சீன அரசுக்கு எதிராக நடந்த ...
Read More »