அவுஸ்திரேலியாவின் முன்னணி நிதி ஆய்வு ஊடகமான (Financial Review) பட்டியல்படுத்தியுள்ள இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவிலிருந்து 1970-களில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து கட்டுமான துறையில் செல்வந்தராக திகழும் மகா சின்னத்தம்பி Financial Review பட்டியல்படுத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் 64 ஆவது நபராக இடம்பிடித்துள்ளார்.
Financial Review பட்டியல்படுத்தியுள்ள குறித்த நிதி ஆய்வு நிறுவனம் இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் மகா சின்னத்தம்பி 64 ஆவது நபராக இடம்பெற்றுள்ளதுடன்,இவரின் சொத்துப்பெறுமதி 1.78 பில்லியன் டொலர்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.
1980-களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்துகொண்டு குயின்ஸ்லாந்துக்கு சென்ற மகா சின்னத்தம்பி, 2860 ஹெக்டயர் பரப்பளவுடைய மிகப்பெரிய காட்டு நிலமொன்றை இன்னொருவருடன் இணைந்து 72 லட்சம் டொலர்களுக்கு வாங்கி, அந்த நிலத்தை மக்கள் குடியேற்றத்துக்குரிய வீடமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.