கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினமும் நேற்றும் வெளிவந்த பி.சி.ஆர். முடிவுகளின்படி 64 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை, அறிவியல் நகரில் உள்ள பழச்சாறு உற்பத்தி
நிறுவனம் மற்றும் சாந்தபுரம் கிராமத்திலேயே இந்தத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் தொற்று ஏற்படுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் சுகாதார நடைமுறை களைக் கவனத்தில் எடுத்து நடந்து கொள்ளாதவர்கள் என்றே கூறப்படுகின்றது.
நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் சுகாதார விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.