யாழ். பல்கலை ஆங்கில விரிவுரையாளர் கொரோனாவுக்குப் பலி

யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிஆர் சோதனையில் விரிவுரையாளர் ஸ்ரீரஞ்சினிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமாகியுள்ளார்.