ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சில் 13 வாரம் கர்ப்பமாக உள்ள தீயணைப்பாளர் ஒருவர் பணியாற்றுகிறார். 23 வயது ஆனா கேட் ராபின்சன்-வில்லியம்ஸ் எனும் தீயணைப்பாளர் ஆடையுடன் Instagramஇல் தம் படத்தைப் பதிவுசெய்திருந்தார். தம் நாட்டை நேசிப்பதாகவும், தீயை அணைக்க தமது நண்பர்கள் போராடி வரும்போது தாம் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். 13 வாரச் சிசுவின் sonogram படத்தையும் அவர் பதிவேற்றம் செய்தார். சரியான பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, மருத்துவரின் ஒப்புதலுடன் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ஆயிரம் நாள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள ஐ.நா.பிரதிநிதிகள்!
வவுனியாவில் 997ஆவது நாட்களைக் கடந்து போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், தமது போராட்டத்தைப் பார்வையிடவுள்ளதாக தெரிவித்திருப்பதாகவும் சில சர்வதேச ஊடகவியலாளர்களும் தமது ஆயிரம் நாள் போராட்டத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் தமது போராட்டத்துக்கு பொது மக்கள் ஆதரவை வழங்குமாறு கோருவதாகவும் காணாமல்போனோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒற்றையாட்சி அரசுக்குள் சமஷ்டி மறைந்திருப்பதாக சம்பந்தன் பொய் சொல்லும்போது ...
Read More »ஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு!
நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு, எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் ...
Read More »கோத்தாபயவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்!
கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே தமிழ் மக்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர். இன்றும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் நலன்சார் எந்தத் திட்டங்களையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்சினை ஒன்று இருப்பதாகக் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்றுக்காட்டுவேன் எனக் கூறும் நபரை தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அதிகம் விமர்சிக்கப்படும் வெள்ளை வேன் ...
Read More »11பேர் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் : மூவரை அரச சாட்சியாக்குவதற்கு சட்டமா அதிபர் திட்டம்!
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவருக்கு பொது மன்னிப்பளித்து அவர்களை வழக்கின் அரச சாட்சிகளாக பயன்படுத்த சட்ட ...
Read More »மோடி விடுத்த கோரிக்கையில் ஆஸ்திரேலியா சிலைகள் கிடைத்தன!
ஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டதாகவும், பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ...
Read More »திருமண மேடையிலிருந்து உடை மாற்ற சென்ற மணமகன் தூக்கில் தொங்கினார்!
இந்தியாவில், ஹைதராபாத் தாலி கட்டுவதற்கு அரை மணி நேரமே இருந்த நிலையில்.. மணமேடையிலேயே தூக்கில் தொங்கிவிட்டார் மாப்பிள்ளை! இந்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப். இவர் ஒரு தொழில் அதிபரின் மகனாவார். வசதியாக வாழ்ந்து வந்த இவர் ஒரு மென்பொறியியலாளராவார். இந்நிலையில், சொந்தக்கார பெண்ணுடன் இவருக்கு கடந்தமாதம் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ள நிலையில், நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மாப்பிள்ளை அறைக்கு சென்று ஆயத்தமாகிகொண்டு வருகிறேன் என்று சென்றவர், அவர் அறையை விட்டுவெளியே வரவே இல்லை… ...
Read More »விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை !
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த இந்திய மத்திய அரசின் உத்தரவை டெல்லி நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த தடை நீடிக்கப்பட்டு வந்தது. அதற்கமைய கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்து உத்தரவிட்டது. அதேநேரம் இந்த ...
Read More »2009 இல் இடம்பெற்ற இந்தியத் தொடர் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி
2009 ஆம் ஆண்டு இந்திய தொடர் நடத்தும் உடன்படிக்கையில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றதாகவும் 15 மில்லியன் டொலர் நிதி வரவேண்டியிருந்தும் வெறுமனே 3 மில்லியன் டொலர் மட்டுமே இலங்கை கிரிக்கெட் சபைக்கு வந்தது. ஏனைய பணத்தொகை என்னவானது என்பது தொடர்பில் கண்டறிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்கிறார் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க. பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் அமைச்சர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார். அவர் இதில் கூறியதாவது. கடந்த காலங்களில் கிரிக்கெட் சபையில் ...
Read More »ரோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கண்டனத்திற்குறியது!
ரோயல் பார்க் கொலை சம்பவத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நபரை ஜனாதிபதி ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது ஒரு துன்பகரமான செயலாகும் என்பதோடு ஒரு பிழையான முன்மாதிரியாகும் என ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துகொள்கின்றோம். நீதிமன்றத்தால் முறையான விசாரணைக்கு பின்னர் தண்டனை விதிக்கப்பட்ட நபரை நாட்டின் ஜனாதிபதியால் ஒரு கையெழுத்தின் மூலம் விடுதலை செய்வது என்பது ஒரு துன்பகரமான செயலாகும். இது சட்டத்தின் ஆட்சி, ...
Read More »