அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய ;காட்டுத்தீயினால் சுமார் 3 பில்லியன் விலங்குகள் உயிரிழந்தது அல்லது இடம்பெயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. விஞ்ஞானிகள் கூற்றுப்படி, நாட்டின் பூர்வீக வனவிலங்குகளுக்கு ஏற்படும் தாக்கத்தின் அளவை முதன்முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது “நவீன வரலாற்றில் மிக மோசமான வனவிலங்கு பேரழிவுகளில் ஒன்றாகும்” என்று இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) தெரிவித்துள்ளது. கடந்த கோடையில் காட்டுத் தீப்பிழம்புகளால் ஒவ்வொரு அவுஸ்திரேலிய மாநிலத்திலும் பரவி 33 பேர் உயிரிழந்தனர். அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள பல பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 விஞ்ஞானிகள் குழு பாலூட்டிகள், ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
யாழில் நால்வருக்கு கொரோனா தொற்று
யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாகவும் அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று இருக்கலாமென வைத்தியர் தெரிவித்துள்ளார். எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியா்கள் 4 போ் அடையாளம் காணப்பட்டு அவா்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், எதிர்வரும் 31ம் திகதி பரிசோதனை நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார். குறித்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியுள்ளார். இது குறித்து இன்று மாலை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ...
Read More »வன்னியில் சிங்களவர் ஒருவரை வெற்றிபெற வைப்பதற்கு முயற்சி
வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ள செல்வம் அடைக்கலநாதன் சிங்களவர் வரமுடியாத வன்னியில் அவர்கள் வருவதற்கான ஆபத்தையும் வாய்ப்பையும் பலர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார். சிங்களவர் ஒருவர் வன்னியில் வெற்றிபெற்றால் அவரைநிச்சயம் அமைச்சராக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கே சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கப்படும், எம்மை முற்றுமுழுதாக நசுக்கும் ஆபத்து ஏற்படும்; எனவும் அவர் தெரிவிததுள்ளார். தனிப்பட்டவர்கள் ...
Read More »அவுஸ்திரேலியாவில் மேலும் உயிரிழப்புகள் ஏற்படலாம்- மருத்துவ அதிகாரி
அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் காரணமாக எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என பிரதிமருத்துவ அதிகாரி மைக்கல் கிட் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் விக்டோரியாவில் 532 பேரும், நியுசவுத்வேல்சில் 17 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் மேலும் ஆறு பேர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இது வரை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 14,935 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள மைக்கல் கிட் 161 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மேலும் ...
Read More »சிவில் உரிமைகள் இயக்க முன்னோடி ஜான் லூயிஸ் மறைவு
சிவில் உரிமைகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஜான் லூயிஸ் எம்பி-யின் இறுதி ஊர்வலம், அவரது வரலாற்று சிறப்பு மிக்க போராட்டக்களமான எட்மண்ட் பெட்டஸ் பாலத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லாண்டா நகரில் வசித்து வந்தவர் ஜான் லூயிஸ். சிவில் உரிமைகள் இயக்கத்தின் முன்னோடியும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நீண்டகால உறுப்பினருமான இவர் கடந்த 17ம் திகதி காலமானார். அவருக்கு வயது 80. கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு ...
Read More »முதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளியாகும்?
ஆறாம் திகதி மாலைதேநீரின் போது முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்களிப்பு ஐந்தாம் திகதி காலை ஏழு மணிமுதல் மாலை ஐந்துமணிவரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம்திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார். ஆறாம் திகதி மதியஉணவுக்கு முன்னதாக முதலாவது முடிவை அறிவிக்க எண்ணியுள்ளோம் அனைத்தும் திட்டமிடப்பட்டபடி நடைபெற்றால் மதியதேநீர் வேளையின் போது முதலாவது முடிவு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். 2020 பொதுத்தேர்தலில் ...
Read More »தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டடு விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்திருந்தார்.
Read More »கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்!!
“தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படும் இன்றைய நிலையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது போர்க்குற்றம் என்ற சர்வதேச பொறியிலிருத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அப்போதைய அரசாங்கத்துக்கு உதவியது போன்ற உதவிகளை எதிர்காலத்தில் தானும் அதனிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றே நினைக்கின்றது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார். கூட்டணியின் கருத்துப் ...
Read More »உடல்நல மோசமடைந்ததால் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்!
ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தமிழ் அகதி குடும்பம்: உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவி ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடியேற்றத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உடல்நல மோசமடைந்ததால் பிரியா ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் குழந்தைகளும் அவரது கணவரும் பிரியாவிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த ...
Read More »சுமந்திரனுக்கு விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு ஏன்?
சுமந்திரன் முன்பு 10 Field Bikes சகிதம் வலம் வந்தவர் இப்போது 20 Bikes இல் விஷேட அதிரடிப்படை காவல் வழங்க அவர்களுக்கு நடுவில் திரிகின்றார். இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது கூட்டமைப்பினருக்கே தமது நடவடிக்கைகளில் பலத்த சந்தேகங்கள் காணப்படுகின்றன. எங்கே பொது மக்கள் தம்மை கேள்வி கேட்பார்களோ அல்லது எள்ளி நகையாடுவார்களோ அல்லது தமக்கு எதிராக சிறிய வன்முறைகளை பிரயோகிப்பார்களோ என்ற பயத்திலேயே இவ்வாறு கூடுதல் பாதுகாப்பு உதவிகளை பெற்றிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது” என தமிழ் மக்கள் ...
Read More »