தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில் விஞ்ஞாபனத்தின் மூலப்பிரதி கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனால் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டடு விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்திருந்தார்.
Eelamurasu Australia Online News Portal