வன்னியில் சிங்களவர் ஒருவரை வெற்றிபெற வைப்பதற்கு முயற்சி

வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வன்னியில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என சுட்டிக்காட்டியுள்ள செல்வம் அடைக்கலநாதன் சிங்களவர் வரமுடியாத வன்னியில் அவர்கள் வருவதற்கான ஆபத்தையும் வாய்ப்பையும் பலர் உருவாக்கிக்கொண்டிருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

சிங்களவர் ஒருவர் வன்னியில் வெற்றிபெற்றால் அவரைநிச்சயம் அமைச்சராக்குவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கே சிங்கள குடியேற்றங்கள் அதிகரிக்கப்படும், எம்மை முற்றுமுழுதாக நசுக்கும் ஆபத்து ஏற்படும்; எனவும் அவர் தெரிவிததுள்ளார்.

தனிப்பட்டவர்கள் மீது கொண்டிருக்கும் வெறுப்பைதமிழ்தேசிய கூட்டமைப்பின்மீது காட்டக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விடுதலை என்ற வேட்கையோடு வீட்டை உருவாக்கிய தமிழ்மக்கள் அதனை உடைத்தார்கள் என்ற வரலாறு உருவாகக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பை மௌனிக்கச்செய்வதற்காக வன்னியில் அதிகம் பேர் களமிறக்கப்பட்டுள்ளனர் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த அபாயநிலையை உருவாக்கியது மகிந்தவும் கோத்தபாயவுமே என தெரிவித்துள்ள அவர் தமிழ்மக்கள் தமிழ்கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துவதற்கான சூழ்;ச்சி இதுவென குறிப்பிட்டுள்ளார்.

இன்று அனைவரும் கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர் எனினும் இந்த பகுதியில் இராணுவசோதனை சாவடிகளை அமைத்து அடக்குமுறையை முன்னெடுக்கும் அரசாங்கத்தை விமர்சிக்க எவரும் முன்வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.