முதலாவது தேர்தல் முடிவு எப்போது வெளியாகும்?

ஆறாம் திகதி மாலைதேநீரின் போது முதலாவது தேர்தல் முடிவு வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்களிப்பு ஐந்தாம் திகதி காலை ஏழு மணிமுதல் மாலை ஐந்துமணிவரை இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆறாம்திகதி காலை ஆறு மணிக்கு ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆறாம் திகதி மதியஉணவுக்கு முன்னதாக முதலாவது முடிவை அறிவிக்க எண்ணியுள்ளோம் அனைத்தும் திட்டமிடப்பட்டபடி நடைபெற்றால் மதியதேநீர் வேளையின் போது முதலாவது முடிவு வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

2020 பொதுத்தேர்தலில் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்,இவர்களில் 3652 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .