ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 20வது திருத்தத்தில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது என தகவலகள் வெளியாகியுள்ளன. 19வது திருத்தம் ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் ஐந்து வருடங்களுக்கு மாத்திரம் பதவி வகிக்கலாம் என தெரிவித்துள்ளது. எனினும் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20வது திருத்தத்தின் நகல்வடிவில் இந்த விடயத்தில் மாற்றங்கள் காணப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 19வது திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை எனவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்க முடியும் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
விக்கியை கைது செய்யுங்கள் என்கிறார் சுதந்த தேரர்
புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:- அரசியல் இலாபத்துக்காக இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். அவரின் இந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஓரணியில் திரளவேண்டும். அதுமட்டுமல்ல விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்து வாக்குமூலம் பதிவுசெய்யவேண்டும். நாடாளுமன்றத்துக்குள் மட்டுமல்ல வெளியிலும் ...
Read More »இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் இடையே ஒப்பந்தம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே காசா பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில் சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ...
Read More »பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாறு பற்றிய விவரத்தை இந்த தொகுப்பில் காண்போம்… இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பணியாற்றியவர் பிரணாப் முகர்ஜி. 84 வயதாகும் பிரணாப் கடந்த 9-ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் குளியல் அறையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டு இடது கை உணர்ச்சியற்ற நிலையில் இருந்ததால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரணாப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையும், மூளையில் ரத்தக்கட்டி ...
Read More »சிறைச்சாலைகளில் 444 பேர் இன்று விடுதலை!
சிறைச்சாலையில் உள்ள நெருக்கடியினை குறைப்பத ற்கு நாடு பூராகவும் உள்ள சிறைச்சாலைகளில் 444 பேர் வரையிலான கைதிகளை விடுதலை செய்வதற்கு ஜனா திபதியின் தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடு தலை செய்யப்படவுள்ளனர். அத்துடன், புதிய கொரோனா வைரஸ் பரவுவதாலும், சிறைகளில் தற்போது ஏற்படும் நெரிசல் காரணமாகவும், கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தீர்மானித் துள்ளதாக சிறசை்சாலை கள் ஆணை யாளர் துஷார உப் புல் தெனிய தெரிவித்துள்ளார். இந்நிலையில், 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் இன்று செவ்வாய்கிகழமை விடுதலை செய்யப்பட ...
Read More »இணையத்தள ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
இணையத்தள ஆசிரியரான டெஸ்மன்ட் சதுரங்க டி அல்விஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மடிக்கணினியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் இவர் கைதானதாகவும், நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்தி ஒன்றை வெளியிட்டமைக்காகவே இவர் கைதானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. லங்காநியுஸ்வெப் என்ற இணையத்தள ஆசிரியராக இவர் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்
மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (வயது 84) காலமா னார். பிரணாப் முகர்ஜி காலமானதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது கட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வந்த நிலையில், நினைவு திரும்பாமலேயே புது டில்லியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. மூளையில் இரத்தக் கட்டியை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் ...
Read More »புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்கிறார் விமல்
19 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதி லாக, 2/3 பெரும்பான்மை செல்வாக்கின் கீழ் 1978 ஆம் ஆண்டு முதல் பழுதுபார்க்கப்பட்டு வரும் இந்த அரசி யலமைப்பை மாற்றுவதற்காக நாட்டை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். நாட்டை பாதுகாக்கவும் , ஒரே சட்டத்தின் கீழ் நாட்டை கொண்டுவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தி ற்கு மக்கள் 2/3 பெரும்பான்மை பலத்தை வழங்கியுள் ளனர் என ...
Read More »சர்வதேசம் மௌனம் காப்பது ஏன்?
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டது. மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(31) காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் இடம் பெற்றது. இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒன்று கூடி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ...
Read More »அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்கள் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை!
அரசியலமைப்பை மாற்றுவதால் சிறுபான்மை மக்களின் சுதந்திரமும் பாதுகாப்பும் இல்லாமல் மேலும் அடிமையான இனமாக நாம் வாழக்கூடிய நிலை ஏற்படும் இதனால் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு வழிகோலும் என, இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதித் தலைவரும் மட்டு. மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 13,ம், 19,ம் திருத்தத்தை மாற்றுவது தொடர்பில் மேலும் கருத்து கூறுகையில், புதிய அரசாங்கம் தற்போது பதவி ஏற்றதுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஷபக்ச 19,வது அரசியல் அமைப்பை முழுமையாக இல்லாமல் செய்து 20,வது அரசியலைமைப்பை கொண்டு வருவதாகவும் ...
Read More »