அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக வந்தவர்களில் சுமார் 200 பேர் வெவ்வேறு விசாக்களுக்கு விண்ணப்பித்து அவுஸ்திரேலியாவிலேயே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 50 பேர் விசா முடிந்த பின்னரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை பொதுநலவாய நாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக 8,103 பேர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்துள்ளனர். இவர்களில் 7,848 பேர் மாத்திரமே நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் வெவ்வேறு விசாக்களுக்கு 200 பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது bridging விசாவில் சட்டரீதியாக தங்கியிருப்பதாகவும் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
மனோகணேசனிற்கு துணிவிருந்தால் என்னுடன் விவாதத்திற்கு வருக!
சிறிலங்கா அரசின் தமிழ் அமைச்சரான மனோகணேசனிற்கு துணிவிருந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் உங்களை பற்றி பேசுவது அரசியல் நாகரிகம் இல்லை. நீங்கள் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக உள்ளீர்கள். உங்களை விமர்சித்தால் , அது மலையக தமிழர்களை புண்படுத்தும் என பேசாது விடுகிறேன். தொடர்ந்து என்னை நீங்கள் சீண்டினால் நான் தொடர்ந்து பொறுமை காக்க மாட்டேன். மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது கூட இனப்படுகொலையின் அம்சம் என்பதை ...
Read More »நீர்கொழும்பில் நாளை நினைவேந்தல் நிகழ்வு!
இறுதிப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வொன்று நாளை புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு நீர்கொழும்பு பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெறவுள்ளது. மக்கள் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இனவாதத்துக்கும் போருக்கும் எதிரான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டுமென அந்த அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்!
ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சார்ந்த தகவலை தொடர்ந்து லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருக்கிறது. லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனின் முதல் டீசரில் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பதை அந்நிறுவன துணை தலைவர் சாங் செங் வெய்போ போஸ்ட்-இல் தெரிவித்திருந்த நிலையில், இசட்5 ஸ்மார்ட்போனின் மற்றொரு அம்சத்தை புதிய டீசரில் தெரிவித்திருக்கிறார். புதிய டீசரில் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போனில் 4000 ஜிபி (4TB) இன்டெர்னல் மெமரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய இன்டெர்னல் மெமரி கொண்டு ஸ்மார்ட்போனில் 10 ...
Read More »104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை!
புரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்ற 104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து துருக்கி நீதிமன்றம் அளித்துள்ளது. துருக்கி நாட்டில் தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் திகதி அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் சிலர் புரட்சியில் ஈடுபட்டனர். இதற்கு போலீசாரின் ஒரு பிரிவினரும், அரசு ஊழியர்களும் உதவி செய்தனர். ஆனால், இந்த புரட்சி சில மணி நேரங்களில் முறியடிக்கப்பட்டது. இதனால் ஆட்சி தப்பியது. இந்த புரட்சியில் அதிபருக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ...
Read More »சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு, 13,314 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 1024 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 5 பேர் சீரற்ற காலநிலையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறி தற்காலிகமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதேவேளை, சில மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இரத்தினபுரி, களுத்துறை, காலி, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், மலையகத்தில் ...
Read More »அரசாங்கத்திற்கு எதிராக ஜூன் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள்!
அரசாங்கம் சட்டவிரோதமானது எனவும் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயற்படுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தற்போதுள்ள அரசாங்கம் பதவி விலக வேண்டும், இவர்களால் நாட்டை ஆட்சி செய்ய முடியாது என் முன்னாள் வௌியுறவு அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் அளிக்கும் போதே பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கூட்டு எதிர்க்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் ...
Read More »சந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்யும் சீனா!
சீன ஆராய்ச்சியாளர்கள் சந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்யும் வகையில் செயற்கை கோளை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இன்று அதிகாலை புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. 400 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோள் சந்திரனின் இருண்ட பக்கத்தை குறித்து ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ராக்கெட்டிலிருந்து செலுத்தப்பட்ட 25 நிமிடத்தில் செயற்கை கோள் பூமி-சந்திரன் வட்டப்பாதையை சென்றடைந்தது. அதன் பின் தகவல் தொழில்நுட்பம் செயல்பட தொடங்கியது. குயூகியா என்ற இந்த செயற்கை ...
Read More »செல்பி மோகத்தால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் பலி!
ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைப்பகுதியின் ஆபத்தான இடத்தில் செல்பி எடுக்க முயன்ற இந்திய மாணவர் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் படித்து வரும் இந்திய மாணவர் அங்கித் என்பவர் அவரது நண்பர்களுடன் அல்பானி அருகில் உள்ள புகழ்பெற்ற கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, தனது செல்பி மோகத்தால் கோட்டையின் அருகில் உள்ள ஆபத்தான மலைப் பகுதிக்கு சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது கால் தவறி விழுந்த மாணவர், கடலில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ...
Read More »ரஜினியின் 2.0 படத்தின் கதை!
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் – அக்ஷய் குமார் – ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் கதை சினிமா வட்டாரங்களில் வைரலாக பரவி வருகிறது. உலகமே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், இந்தி நடிகர் அக்ஷய் குமார், ஏ.ஆர்.ரகுமான், லைகா என்று ஜாம்பவான்கள் இணைந்திருக்கும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் தான் சிக்கல் எழுந்துள்ளது. ஷங்கர் முதலில் கொடுத்த நிறுவனம் செய்து காண்பித்த கிராபிக்ஸ் வேலைகளில் ஷங்கருக்கு திருப்தி இல்லை ...
Read More »