இறுதிப் போரில் இறந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வொன்று நாளை புதன்கிழமை மாலை நான்கு மணிக்கு நீர்கொழும்பு பேருந்து நிலையத்தின் முன்பாக நடைபெறவுள்ளது.
மக்கள் உரிமையைப் பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வுக்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இனவாதத்துக்கும் போருக்கும் எதிரான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டுமென அந்த அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.