ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதேபோல இப்போது சைடுவியூ எனும் வசதியை ஃபயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம். அதாவது யூடியூப் காணொளி பார்த்தபடி ஷாப்பிங் செய்யலாம் அல்லது ட்விட்டர் பதிவுகளைப் பார்த்தபடி வேறு ஒரு தளத்தைப் பார்க்கலாம். ஃபயர்பாக்ஸ் சோதனை வசதிகளின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதைத் தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இணைய முகவரி: https://bit.ly/2JrgeC4
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
கால்கள் இன்றி பிறந்த மகளை நடக்க வைத்த அப்பா!
சிரியாவில் பிறவியிலேயே கால்கள் இன்றி முடங்கி கிடந்த தனது குழந்தைக்கு வெளியுலகை காட்டி நடக்க வைத்த தந்தையின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள அலெப்பி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது மெர்கி (34). இவரது மகள் மாயா மெர்கி (8). இவள் கால் இன்றி பிறந்தாள். பிறவியிலேயே இவளுக்கு முழங்காலுக்கு கீழ் பகுதி இல்லை. எனவே இவலால் நடக்க முடியவில்லை. வெளி உலகை காண முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தாள். உள் நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்பி பகுதியில் இருந்து ...
Read More »கஜேந்திரகுமாரை தலைவர் பிரபாகரனோடு ஒப்பிட்டு பேசியமை சரியானதே!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனோடு ஒப்பிட்டு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பேசியிருந்தார். அது வரவேற்கப்படவேண்டிய விடயம். தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களுக்குத் தீர்வாக எதைக் கொடுக்க முயன்றாரோ, அந்தக் கொள்கையில்தான் கஜேந்திரகுமாரும் போராடி வருகின்றார். இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா தெரிவித்தார். வவுனியாவில் செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். வடக்கு மாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் வழக்குத் தொடுத்தமை உண்மையில் ...
Read More »கூகுளில் புதிய வசதி!
தேடியந்திர நிறுவனமான கூகுள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றான ‘கூகுள் டிரெண்ட்ஸ்’ சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன. கூகுளில் தேடப்படும் பதங்களின் அடிப்படையில், தற்போது எந்தப் பதம் அதிகம் தேடப்படுகிறது என்பதை அறிவதற்கான சேவையாக இது அமைந்துள்ளது. இணைய உலகில் போக்குகளை அறிய இந்த சேவை ஏற்றதாக இருக்கிறது. 2006-ல் அறிமுகமான இந்த சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு: https://trends.google.com/trends/?geo=IN
Read More »பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!
ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரம் பேருக்கு இழப்பீடாக பணம் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் பள்ளி, பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆண் – பெண்களுக்கு இழப்பீடாக பணம் வழங்கும் திட்டத்துக்கு அந்நாட்டு சமூக நலத்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. பாதிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்யும் வகையில் தனி அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முகமையின் பரிந்துரையின் பேரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு சராசரியாக 67 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களும், ...
Read More »உலகிலேயே உயரமான சிறுவன் 11 வயதில் 6 அடி!
சீனாவில் 11 வயது பள்ளி மாணவன் ஒருவன் 6 அடி உயரம் வளர்ந்திருப்பதால், உலகிலேயே உயரமான சிறுவன் என்னும் பெருமையை பெற்றுள்ளான். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ. 11 வயதான இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும்.இதன் மூலம், உலகிலேயே இந்த வயதில் அதிக உயரம் கொண்ட சிறுவன் என்ற பெருமை இவனுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து ரேன் கேயூ கூறுகையில்,எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் வயது குழந்தைகளை விட மிக உயரமாகவே இருந்தேன். ...
Read More »ஜெயலலிதா ஆக ஆசை! – மஞ்சிமா மோகன்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் நாயகி ஆனவர் மஞ்சிமா மோகன். ஒல்லியான நடிகைகளுக்கு மத்தியில், பப்ளியும் அழகுதான் என ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘குயின்’ இந்திப் படத்தின் மலையாள மறு ஆக்கமான ‘ஜம் ஜம்’ படத்தில் நடித்துவருபவரிடம் உரையாடியதில் இருந்து… ‘ஜம் ஜம்’ படப்பிடிப்பு எந்தக் கட்டத்தில் இருக்கிறது? இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு. இந்தியில் ‘குயின்’ படம் ரிலீஸானபோதே பார்த்துவிட்டேன். ரொம்பப் பிடித்திருந்தது. அதன் மலையாள ரீமேக்கில் நடிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கங்கனா ரனாவத் நடித்த கேரக்டர் ...
Read More »விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கான ஏதுநிலை அல்ல!
வடக்கில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பிரச்சினை இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவ்வாறான செயற்பாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கான ஏதுநிலை அல்ல வெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தவித இடையூறும் இல்லை எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »முதலமைச்சர் விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சராக்க முயற்சி!
வட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தற்போதுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரனையே மீண்டும் களமிறக்குவதற்கு பல முனைகளில் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால் வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனின் அணியோ பொம்பான்மை பலத்தினை பெறமுடியாத நிலை ஏற்படுவதோடு, தமிழரின் பேரம்பேசும் பலமும் வெகுவாக குறைந்து விடும். அவ்வாறு குறைகின்றபோது உரிமைகளை வென்றெடுத்தல் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் மோசமான நிலையை அடைந்து விடும் என்பது தமிழ்த் தேசிய அரசியல் ...
Read More »முல்லைத்தீவு காட்டில் துப்பாக்கி வெடித்து சிதறியதில் முகம் சிதைந்த இளைஞனின் சடலம்!
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வனப்பகுதியொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மீட்கப்பட்டுள்ள இந்த சடலம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் என தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர் முள்ளியவளை 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22 வயதான இளைஞர் என முல்லைத்தீவு காவல்துறை தெரிவித்துள்ளது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தலைப்பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எப்படி இடம்பெற்றது என காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் ...
Read More »