விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கான ஏதுநிலை அல்ல!

வடக்கில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பிரச்சினை இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவ்வாறான செயற்பாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கான ஏதுநிலை அல்ல வெனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டின் பாதுகாப்பிற்கு எந்தவித இடையூறும் இல்லை எனவும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.