கனடாவில் இந்திய தம்பதிக்கு இனவெறி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடாவில் ஆன்டாரியோவில் உள்ள ஹாமில்டனில் வால்மார்ட் மையத்துக்கு இந்திய தம்பதி வந்திருந்தனர். அங்கு அவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தியிருந்தனர். பொருட்கள் வாங்கிய பின் வீடு திரும்ப வாகனத்தை எடுக்க வந்தனர். அப்போது அங்கு இருந்த வெள்ளைக்காரர் டேல் ராபர்ட்சன் (47) என்பவருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது டேல்ராபர்ட்சன் இந்திய தம்பதிக்கு இனவெறி மிரட்டல் விடுத்தார். நான் கனடாவை சேர்ந்தவன். எனக்கு தான் இங்கு இருக்க உரிமை உள்ளது. உங்களை ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வடமராட்சியில் தொடர் படகு எரிப்பு!
வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொழுத்தபட்டுள்ளது. தாளையடி பகுதியில் கரையில் விடப்பட்டு இருந்த படகுக்கும் அதன் இயந்திரத்திற்கும் நேற்று இனம் தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். அதனால் படகும் அதன் இயந்திரமும் முற்றாக எரிந்து நாசமாகி உள்ளது. தென்னிலங்கை மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் கடலட்டை பிடிக்கும் தொழில் செய்வதற்கு உள்ளூர் மீனவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எரிக்கப்பட்ட படகின் உரிமையாளரும் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கு கடும் எதிர்ப்பு ...
Read More »எச்சரிக்கையை மீறி மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா!- அமெரிக்கா
எச்சரிக்கையும் மீறி வடகொரியா மீண்டும் 2 ஏவுகணைகள் தயாரிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதனால் அமெரிக்காவும், ஐ.நாவும் வடகொரியா மீது கடும் பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உருவானது. கொரிய தீபகற்பத்தில் போர் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே பதட்டத்தை தணிக்க கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கும் நேரில் சந்தித்து பேசினர். அப்போது ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை ...
Read More »ஜோதிகாவின் பிறந்த நாளில் வெளியாகும் ‘காற்றின் மொழி’!
ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் திகதி வெளியாக இருக்கிறது. ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 4-ம் திகதி தொடங்கிய படப்பிடிப்பு, எந்த இடைவெளியும் இன்றி கடந்த 25-ம் ...
Read More »சிறிலங்கா பயணமாகும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம்!
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி சிறிலங்காவிற்கு வருகைத்தரவுள்ளார். அவர் கடந்த 2016ஆம் ஆண்டு அமைப்பின் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமையவுள்ளது. நாளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன ஆகியோரை சந்திக்கவுள்ளார். விஜயத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நாட்களில் இடம்பெறவுள்ள அவரது சந்திப்புகளில் அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், மலிக் சமரவிக்ரம; மாகாண சபைகள், ...
Read More »இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையானார் பாலஸ்தீன சிறுமி !
இஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்ததற்காக சிறைத் தண்டணை விதிக்கப்பட்ட பாலஸ்தீன சிறுமி அஹித் தமீமி விடுவிக்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான அஹிம் தமீமிக்கு பாலஸ்தீனத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நில ஆக்கிரமிப்புகள் மற்றும் பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் வீரர்களின் அட்டூழியங்களை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர். அம்மக்களின் பல ஆண்டுகால போராட்டம் உலக நாடுகளிடம் பெரிதான தாக்கத்தையும் ஏற்படுத்தாத நிலையில் 17 வயது சிறுமியான அஹித் தமீம் தனது போராட்டத்தின் மூலம் உலக நாடுகனை பாலஸ்தீனம் மீது கூடுதலாக பார்வை விழும்படி ...
Read More »வடக்கு வந்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்! -விஜயகலா
வடக்கு மக்களின் உண்மை நிலையினையும், பாதிக்கப்பட்ட மக்களின் மனோநிலையினையும் அறிய வேண்டுமாயின் தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கிற்கு விஜயம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் வடக்கில் பல உள்ளக பிரச்சினைகள் காணப்படுகின்றது. வெளியில் காணப்படுகின்ற ஒரு சில பிரச்சினைகள் மாத்திரமே தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு தெரிகின்றது. தெற்கில் இருந்துக் கொண்டு வடக்கில் நிர்வாகம் செய்ய முடியாது. இன்றும் வடக்கில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றது. வடக்கு பிரதிநிதிகள் என்று ...
Read More »உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சீன நிறுவனம்!
உலகின் மடிக்கூடிய ஸ்மார்ட்போனினை யார் வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் படி சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹூவாய் நிறுவனத்திற்கு தேவையான வளையும் தன்மை கொண்ட OLED டிஸ்ப்ளேக்களை BOE தொழில்நுட்ப நிறுவனம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் ...
Read More »தமிழ் மக்கள் போரின் பின்னர் வலுவிழந்துள்ளார்கள்!
வடக்கு, கிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்று அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியுள்ளார். தமிழ் மக்கள் போரின் பின்னர் வலுவிழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலுவிழந்தவர்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி, சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என்று அவர் எண்ணுகின்றார் போன்று கருதுகின்றேன் என வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ...
Read More »இனவாத தாக்குதல்கள் தேசிய நலனுக்கு பாதிப்பு!- ரவூப் ஹக்கீம்
சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை, சமயம் சார்ந்து பார்க்காமல் அவை நாட்டின் தேசிய நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடு என்பதை பெரும்பான்மையின மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் எமது அரசியல் செயற்பாடுகள் அமையவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவான உறுப்பினர்களுக்கான இருநாள் வதிவிட செயலமர்வின் முதல் நாள் அமர்வு நேற்று (28) மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயற்சி நிலையத்தில் நடைபெற்றது. இச்செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ...
Read More »