ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் திகதி வெளியாக இருக்கிறது.
ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு, சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தியில் வெளியான ‘துமாரி சுலு’ படத்தின் தமிழ் ரீமேக் இது. வித்யா பாலன் நடித்த வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 4-ம் திகதி தொடங்கிய படப்பிடிப்பு, எந்த இடைவெளியும் இன்றி கடந்த 25-ம் திகதி வரை ஒரே ஷெட்யூலாக நடைபெற்றது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ஏ.எச்.ஹாசிஃப் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 18-ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18-ம் திகதி ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal