சிறிலங்கா ஜனாதிபதியை கொலைச் சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜையின் நடவடிக்கைகள் குறி;த்து சந்தேகம் எழுந்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித்மத்துமபண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தவர்களையும் கொலை செய்வதற்கான சதி முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள தோமஸ் என்ற இந்திய பிரஜை தொடர்பிலேயே அமைச்சர் திவயினவிற்கு இவ்வாறு தெரிவித்துள்ளார். தோமஸ் என்ற இந்திய பிரஜையும் அவரது குடும்பத்தினரும் சிறிலங்காவில் எந்த வித வருமானமும் இன்றி ஒன்றரை வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர் எனவும் அமைச்சர் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
காஞ்சூரமோட்டை மக்கள் மீள்குடியேறுவதில் சிக்கல்!
வவுனியா நெடுங்கேணி பிரதேச செலயகப் பிரிவில் உள்ள காஞ்சூரமோட்டை கிராமத்தைச் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள்குடியேறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பியுள்ள இந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் உரிய அனுமதியை வழங்கியுள்ள போதிலும், வனவளத்துறை அதிகாரிகள் அதற்குத் தடை விதித்துள்ளதாகவும் சுட்டிக்கட்டியுள்ளனர். இது குறித்து வனவளத்துறை அதிகாரிகள், காஞ்சூரமோட்டை கிராமத்தில் அத்துமீறி குடியேறுவதற்கு அனுமதிக்க முடியாது. அங்குள்ள காணிகளுக்கு உரிமை கோருபவர்கள் அதற்குரிய காணி அனுமதிப்பத்திரங்களின்றி அங்கு குடியேறுவது ...
Read More »அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
அரசியல் கைதிகளில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மேலும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படாத அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்போது அவர்கள் தொடர்பில் தேடிப்பாரக்கும் பொறுப்பை காவல் துறைக்கு வழங்க வேண்டும். அவர்கள் காவல் துறை நிலையத்துக்கு வந்து தங்களை உறுத்திப்படுத்தவேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்கலாம். எனினும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம் பெற்றுக்கொண்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்த ...
Read More »அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் 5 நாடுகள்!
ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடையை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது. இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக ...
Read More »ஆஸ்திரேலிய விவசாயிகளைப் பாதித்த விபரீத விளையாட்டு!
ஆஸ்திரேலியாவின் உணவுத்துறை, வேளாண்மை போன்றவற்றில் சமீபகாலத்தில் எழுந்துள்ள மிகப்பெரிய பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது இது ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிடும் அனைவரையும் அச்சுறுத்தியிருக்கிறது கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடந்த சம்பவம் ஒன்று. ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுக்க பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுபவை. அப்படித்தான் நியூசிலாந்துக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து பல்வேறு சூப்பர் மார்க்கெட்களுக்கும் சென்றிருக்கின்றன. வாடிக்கையாளர் ஒருவர் நியூசிலாந்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி பழம் வாங்கியிருக்கிறார். அதனை வீட்டுக்குச் சென்று சாப்பிடப் பார்த்தவருக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அந்தப் பழத்தைக் கடித்தபோது அதனுள்ளே ...
Read More »லெப்.கேணல் தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு வணக்க ஒழுங்கு!
தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்களின் தந்தை ஏற்றுவார். தொடர்ந்து அங்கு ...
Read More »இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி!
இம்ரான் கான் மீதான தகுதிநீக்க மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார். அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இஜாசுன் அஹ்சான் ...
Read More »காஜல் அகர்வாலுக்கு இது திருப்புமுனையாக அமையும்!
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் குயின் படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தியில் பெரிய வெற்றி பெற்ற குயின் படத்தை பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் தமிழில் காஜல் அகர்வாலை கதா நாயகியாக்கி இயக்கி வருகிறார் ரமேஷ் அரவிந்த். அவரிடம் படம் எப்படி வந்துள்ளது என்று கேட்டதற்கு ‘தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன், கன்னடத்தில் பாருல் யாதவ். இப்படி ...
Read More »பரிந்துரைகள் விரைவில் நிறைவேற்றப்படும்! – சாலிய பீரிஸ்
காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையினை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தோம். அப்பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவினால் காணாமல் போனோர் அலுவலகம் சமர்ப்பித்த பரிந்துரைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் விஜேதாஸ ராஜபக்ஷ தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More »திமிர் பிடித்த இந்தியா ! -இம்ரான் கான்
இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தானுக்கிடையே உள்ள பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளதாக பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து. அதனையடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேச இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில் காஷ்மீரில் மூன்று பொலிஸாரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச ...
Read More »