இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

இம்ரான் கான் மீதான தகுதிநீக்க மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரதமருமான இம்ரான் கானை தகுதிநீக்கம் செய்யுமாறு கடந்த ஆண்டு மே மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவர் எம்.பி.யாக இருந்தார்.

அந்த மனுவில் எம்.பி. மனுத்தாக்கலின் போது அவர் தனது பிள்ளையின் பெயரை குறிப்பிடவில்லை இதனால் அவர் அரசின் விதிமுறைகளுக்கு உண்மையாக இல்லை என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.

அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இஜாசுன் அஹ்சான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு காலாவதியாகி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது கடந்த நாடாளுமன்ற காலகட்டத்தில் போடப்பட்டது எனக்கூறிய நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.