முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இருந்து வெளியேறியுள்ளார்.
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
‘கொரோனா’ விழிப்புணர்வு வாசகத்துடன் இயக்கப்படும் 12 லாரிகள்
பொதுமக்களுக்கு ‘கொரோனா’ விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துபாய் போலீசார் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட 12 லாரிகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் அந்த லாரிகள் மூலம் வசதியற்ற மக்களுக்கு இலவச உணவு பொட்டலங்களும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. துபாயில் ‘கொரோனா’ பரவலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது நகரம் முழுவதும் வாகனங்கள் மூலம் ‘கொரோனா’ விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் மொத்தம் 12 லாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த லாரிகளின் ...
Read More »பிரதமருக்கு அனுமதி மறுத்த ஓட்டல் நிர்வாகம்- நியூசிலாந்தில் சுவாரஸ்ய சம்பவம்
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது வருங்கால கணவருடன் ஓட்டலுக்கு சென்ற போது அவரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று ஓட்டல் நிர்வாகம் கூறியது குறித்து காண்போம்… நியூசிலாந்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. எனினும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தனது வருங்கால கணவர் கிளார்க் உடன் தலைநகர் வெலிங்டனில் உள்ள ...
Read More »எல்லைப்படையினர் அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களுக்குள் எல்லைப்படையின் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது. தடுப்பு முகாம்களில் சோதனைகளை மேற்கொள்ளவும் கைப்பற்றப்படும் பொருட்களை பறிமுதல் செய்யவும் இந்த மசோதாவில் இடமளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த அதிகாரம் காவல்துறையினருக்கு மட்டுமே உள்ளது. ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள வெளிநாட்டு குற்றவாளிகளை சமாளிக்கும் விதமாக இத்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டட்ஜ் தெரிவித்துள்ளார். “இவ்வாறான வெளிநாட்டினர் குழந்தைகளை பாலியல் துஷ்பிரோயகம் செய்தவர்களாகவும் வன்முறை, போதை மருந்து பயன்பாடு கொண்டவர்களாகவும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கின்றனர்,” என அவர் ...
Read More »புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் – விக்கி
தர்மத்தின் வழி நின்று நாம் முன்னெடுக்கும் புனிதப் பயணம் என்றோ ஒருநாள் நிச்சயம் வெற்றியினைப் பெற்றுத்தரும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் நல்லூர் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய பின் அவர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், எனதருமை சகோதர சகோதரிகளே, கொரோனா வைரசின் நிழலில் நாம் இன்று ஒருவரோடு ...
Read More »கொரோனா தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்க வாய்ப்பு
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் மாதிரி குறிப்பிடத்தக்க பலனை அளித்திருக்கும் நிலையில் இறுதிக்கட்ட சோதனை வெற்றியடைந்தால் செப்டம்பரில் வெளிவர வாய்ப்பு உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆறு மாதமாக கொரோனா தொற்று 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பலி வாங்கி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 48 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ...
Read More »இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும்!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் பின் சிறையில் அடைக்கப்பட்ட சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரியை, உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்திருந்த நிலையிலும் தற்போதைய சனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா நீதித்துறைமீதான தமிழரின் அவநம்பிக்கையை உறுதிசெய்துள்ளது. எனவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ ...
Read More »முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது!
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொன்றழிக்கப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்றைய தினம் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது இன்று காலை பத்து முப்பது மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் தனது கணவன் மற்றும் தனது பிள்ளையை பறிகொடுத்த இலட்சுமணன் பரமேஸ்வரி அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவு பிரகடனம் வெளியிடப்பட்டது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் சுகாதார நடைமுறைக்கு ...
Read More »இணைய வழியாக ஒன்றுகூடி இதய அஞ்சலியை செலுத்துவோம்!
அன்பான அவுஸ்திரேலியா வாழ் தமிழ் உறவுகளே! நீதிக்கான குரலாக அனைவரும் ஒன்றுபட்டு எமது உறவுகளை நெஞ்சங்களில் நினைவேந்தி நினைவு கூருவோம். தற்போதைய கொறானா வைரஸ் என்ற தொற்றுநோயினால் ஏற்பட்ட இடர்கால நிலையால், அனைவரும் ஒன்றுபட்டு நினைவுகூர முடியாத காலச்சூழல் உள்ள நிலையில், அனைவரும் தனித்திருந்து ஒவ்வொரு வீட்டிலும் எம் உறவுகளை நினைவில் இருத்தி சுடரேற்றி நினைவுகூருவோம். இணைய வழியாக ஒன்றுகூடி நினைவேந்தல் நிகழ்வில் பங்குகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். காலம்: 18 – 05 – 2020 Monday 7pm – 8pm (AEST), ...
Read More »முள்ளிவாய்கால் நினைவேந்தலை தடுக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணியை முடக்கிய அரசாங்கம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மேற்கொண்ட முன்னணியின் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன், சுகாஸ் உள்ளிட்ட 11 பேரை தனிமைப்படுத்த உத்தரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. பீற்றர் போல் கட்டளையிட்டுள்ளார். நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வார நினைவேந்தலில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினா்கள் ...
Read More »