ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களுக்குள் எல்லைப்படையின் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஆஸ்திரேலிய அரசு ஈடுபட்டிருக்கிறது.
தடுப்பு முகாம்களில் சோதனைகளை மேற்கொள்ளவும் கைப்பற்றப்படும் பொருட்களை பறிமுதல் செய்யவும் இந்த மசோதாவில் இடமளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த அதிகாரம் காவல்துறையினருக்கு மட்டுமே உள்ளது.
ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ள வெளிநாட்டு குற்றவாளிகளை சமாளிக்கும் விதமாக இத்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டட்ஜ் தெரிவித்துள்ளார்.
“இவ்வாறான வெளிநாட்டினர் குழந்தைகளை பாலியல் துஷ்பிரோயகம் செய்தவர்களாகவும் வன்முறை, போதை மருந்து பயன்பாடு கொண்டவர்களாகவும் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்களாகவும் இருக்கின்றனர்,” என அவர் தெரிவித்துள்ளார்.