அவுஸ்திரேலியாவில் அகதிகளின் காலவரையறையற்ற தடுப்புக்கு எதிராக போராட்டம் நடத்திவரும் அமைப்பினர் இன்று காலை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் முகக்கவசங்களுடன் சென்று அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பிரதமரின் கார் உட்பட அவர் சமூகமளித்திருந்த மண்டபம் எனக் கருதப்படும் இடத்திற்கு தக்காளி மற்றும் இரத்தம்போன்று தயாரிக்கப்பட்ட சிவப்புச்சாயத்தையும் எறிந்து சேதம் விளைவித்துள்ளார்கள். இந்த சம்பவத்தினால் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை பதற்றம் நிலவியது. பல்கலைக்கழக மண்டபங்கள் இழுத்து மூடப்பட்டன. அங்கு சமூகமளித்திருந்த பிரதமர் ஸ்கொட் மொறிஸன் அவரது பாதுகாப்பு ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
வடகொரியாவின் கண்டங்களுக்கு இடையிலான மிகப்பெரிய ஏவுகணை
வடகொரியா மிகப்பெரும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை தனது இராணுவஅணிவகுப்பில் காட்சிப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அதிகாலைக்கு முன்பாக இடம்பெற்ற இராணுவஅணிவகுப்பில் முன்னர் ஒருபோதும் இல்லாதவகையில் வடகொரியா தனது மிகவும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையை காட்சிப்படுத்தியுள்ளது. இரண்டுவருடங்களுக்கு பின்னர் வடகொரியா முதல்முறையாக தனது நீண்;ட தூர ஆயுதங்களை காட்சிப்படுத்தியுள்ளது. வடகொரியா இன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஏவுகணை செயற்பாட்டிற்கு வந்தால் உலகின் தரைவழியாக நகர்த்தக்கூடிய உலகின மிகப்பெரும் கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணையாக அது காணப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை ஒரு இராட்சசன் என ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். வடகொரியா ...
Read More »20 க்கு எதிரான எமது நிலைப்பாடு நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் தொடரும்!
“அரசால் முன்மொழியப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் நான்கு பிரிவுகள் தற்போதைய அரசமைப்பின் முதன்மைச் சரத்துக்களை மீறுகின்றன எனவும், அவை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்படாமல் நடைமுறைக்குக்கொண்டுவர முடியாது எனவும் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இருந்த போதிலும் நாங்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் பல விடயங்கள் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான எமது நிலைப்பாடு உறுதியாகத் தொடரும். எதிரணியில் உள்ள அனைவரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.” ...
Read More »பிக்குவின் தலைமையில் திருகோணமலையில் நில அபகரிப்பு
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர் தாயக பிரதேசத்தை புவியியல் ரீதியாக பிரித்து நிற்கும் மையப்புள்ளியான தமிழ் மக்களின் பழமை வாய்ந்த கிராமமான தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலத்தை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இருக்கின்ற பௌத்த பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளதாக தென்னமரவடி மக்கள் தெரிவித்துள்ளனர் . கடந்த மாதம் 24 ஆம் திகதி பனிக்கவயல் தொடக்கம் தென்னமரவடி வரையான 358 ஏக்கர் காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும் உள்ளடக்கி தொல்லியல் திணைக்களதால் எல்லை ...
Read More »வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை – அதிபர் கிம் அறிவிப்பு
வடகொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளும் தடுமாறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என ...
Read More »ஆஸ்திரேலியாவின் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட நாள் (அக்.11, 1850)
சிட்னி பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் அமைந்துள்ளது. 1850-ஆம் ஆண்டு இதே தேதியில் இந்த பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகம் இதுதான். இந்த பல்கலைக் கழகத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் பெரிய பல்கலைக் கழகங்களுள் இது இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.
Read More »மன்னாரில் இரண்டு கிராமங்கள் முற்றாக முடக்கப்பட்டன
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மன்னாரில் இரண்டு கிராமங்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். பள்ளித்தோட்டம் பெரியகடை கிராமங்களை உடனடியாக முடக்குவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
Read More »’20 தொடர்பான தீர்ப்பை இம்மாதம் 20இல் அறிவிப்பேன்’
20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்மானம் தனக்குக் கிடைத்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள சபாநயாகர் அலுவலகத்துக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்திருப்பதாகவும், திங்கட்கிழமை அலுவலகத்துக்குச் சென்று அதனை திறந்துப் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு இம்மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More »உலக வர்த்தக ஸ்தாபனத்தின் தலைவராக முதன் முறையாக பெண்ணொருவர் தெரிவு!
உலக வர்த்தக ஸ்தாபனத்தின் புதிய தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தெரிவு செய்யப்படவுள்ளார். அண்மையில் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் அடுத்த தலைவரைத் தெரிவுசெய்வதற்கான இறுதிச் சுற்றுக்கு 2பெண்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான நைஜீரிய முன்னாள் நிதியமைச்சர் கோஸி ஒகேஞ்சோ-இவியாலா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர் ஆவார். இன்னொருவர் தென் கொரிய வர்த்தகத் துறை அமைச்சர் யூ மியங்-ஹீ ஆவார். 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாடுகளிடையிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வரிகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பில் 164 ...
Read More »முடக்கப்பட்டது அனலைதீவு – ஏன்?
மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அனலைதீவுப் பகுதியை அதிகாரிகள் முற்றாக முடக்கியுள்ளனர். இன்று காலை அனலைதீவுப் பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டிருந்த இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவுப்பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுவதைத் தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அனலைதீவுப் பகுதியை முடக்கியுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் நடமாடியதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து காரைநகரில் அடையாளம் காணப்பட்ட ஐந்து வீடுகளை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். தீவகத்துக்கான போக்குவரத்தும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
Read More »