உலக வர்த்தக ஸ்தாபனத்தின் புதிய தலைவராக முதல் முறையாக ஒரு பெண் தெரிவு செய்யப்படவுள்ளார்.
அண்மையில் உலக வர்த்தக ஸ்தாபனத்தின் அடுத்த தலைவரைத் தெரிவுசெய்வதற்கான இறுதிச் சுற்றுக்கு 2பெண்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரான நைஜீரிய முன்னாள் நிதியமைச்சர் கோஸி ஒகேஞ்சோ-இவியாலா ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர் ஆவார்.
இன்னொருவர் தென் கொரிய வர்த்தகத் துறை அமைச்சர் யூ மியங்-ஹீ ஆவார்.
1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நாடுகளிடையிலான வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வரிகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.