தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவானஒலிப்பதிவு பதிவு குறித்து டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் 2-ந் திகதி சென்ற சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, அங்கு கொலை செய்யப்பட்டார். முதலில் இதனை மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது. இந்த நிலையில், தூதரகத்துக்குள் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டபோது, பதிவான ஒலிப்பதிவு குறித்து சி.என்.என். டெலிவிஷனில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
அவுஸ்திரேலியாவில் உணவகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஆபத்து!
அவுஸ்திரேலியாவில் உள்ள Fast-Food உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுப்பபதாக தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து சில வேளைகளில் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது எனவும் நாடளாவிய ரீதியில் இந்த உணவகங்களில் பணிபுரிபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆத்திரம் கொண்ட வாடிக்கையாளர்கள் உடல் ரீதியான தாக்குதல்களை நடத்துகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. வேறு சிலர் தேனீர் போன்ற சுடுபானங்கள், burger போன்ற உணவுப்பொருட்கள், சிகரெட்களை பணியாளர்களின் மீது எறிவதாகவும், அத்துடன் பாலியல் ரீதியான சொற்களை பிரயோகிக்கின்றனர் எனவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை உணவங்களில் ...
Read More »தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன்!-ஜேம்ஸ் டவுரிஸ்
நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றை மாற்றக்கூடிய உருவாக்கும் தீர்ப்பாக அமையும் என சிறிலங்காவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையிலேயே உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் நான் தீர்ப்பை அறிவதற்காக காத்திருக்கின்றேன் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு வரலாற்றை உருவாக்கும் தீர்ப்பாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர்கள் பல தலைமுறைக்கு ...
Read More »7 மில்லியன் ரூபாயுடன் தலைமறைவு!
களுத்துறை- தொடங்கொட பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த 700 கோடி ரூபாயுடன் குறித்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளாரென களுத்துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில், நேற்றைய தினம் தொடங்கொட காவல் துறை நிலையத்துக்கு 40 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றதாக களுத்துறை பிரதேசத்துக்கு பொறுப்பான காவல் துறை அத்தியட்சகர் உபுல் நில்மினி தெரிவித்துள்ளார். அத்துடன் மத்துகம பிரதேச காவல் துறை விசேட மோசடி விசாரணைப் பிரிவுக்கு பல முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, ...
Read More »உலகில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவில் அறிமுகமாகும் சட்டம்!
கணினி தொழில்நுட்ப முறையில் பாதுகாக்கப்பட்ட தகவல்களை உடைப்பதற்கு தேவையான அதிகாரத்தை காவல் துறை பாதுகாப்பு முகவர் நிலையங்களுக்கும் வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவிடயம் தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை அவுஸ்திரேலியா நேற்று நிறைவேற்றியுள்ளது. இவ்வாறான ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது உலக நாடுகள் மத்தியில் முதற்தடவையான சந்தர்ப்பம் என்று குறிப்பிடப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் பாரிய குற்றச்செயல்களை தடுப்பதற்கு பாதுகாப்பான தகவல்களை உடைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
Read More »கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை!
ஹூவாய் நிறுவன அதிகாரியை உடனே விடுதலை செய்யாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் அதிபர் ரென் ஜெங்பெய்யின் மகள் மெங்வான்ஜவ். இவர் அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. கடந்த 1-ந் திகதி கனடாவில் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் வேண்டுகோளின்பேரில் இந்த நடவடிக்கையை கனடா மேற்கொண்டது. வடகொரியா, ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை, ஹூவாய் நிறுவனம் மீறியதாக ...
Read More »ஆதரவு அளிப்பதா? இல்லையா?- நாளைமறுதினம் தீர்மானம்!
நாடாளுமன்ற நம்பிக்கைப் பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவுக்கே உள்ளது என்ற பிரேரணையை புதன்கிழமை கொண்டு வருவதற்கு அக்கட்சி தீவிர முயற்சி எடுத்துள்ள நிலையில் அதற்கு ஆதரவு அளிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தைக் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை மறுதினம் எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Read More »மும்பை தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான்!
2008-ம் ஆண்டு மும்பையில் தாக்குதலை நடத்தியது ‘லஷ்கர் இ-தொய்பா’ இயக்கம்தான் என்று பாகிஸ்தான் முதல் முறையாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்ளது. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்திகதி கடல் வழியாக புகுந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் 10 பேர் நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியாலும் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை உலக நாடுகள் வன்மையாக கண்டித்தன. தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ-தொய்பா ...
Read More »துப்பாக்கியை உடனடியாக நீக்குங்கள்! – குயின்ஸ்லாந்து காவல் துறை
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள விளம்பர பலகையிலிருந்து துப்பாக்கி படத்தை நீக்குமாறு விளம்பரதாரர்களிடம் குயின்ஸ்லாந்து காவல் துறை ஆணையாளர் Ian Stewart கோரியுள்ளார். இறுக்கமான துப்பாக்கி மற்றும் ஆயுத தடைகளை பேணுகின்ற அவுஸ்திரேலியாவில் இவ்வாறான விளம்பரங்கள் தேவையற்றது என தெரிவித்துள்ளார். இவ்வாறான விளம்பரங்கள் மூலம் தூண்டுதல்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை அவரது கருத்துக்கு இணையதளவாசிகள் பலர் விமர்சனம் கூறி வருகின்றனர். இருப்பினும் ஏனையவர்கள் விழித்துக்கொள்வதற்கு முதல் நாங்கள் விழித்துக்கொள்ளவேண்டும் என குயின்ஸ்லாந்து காவல் துறை ஆணையாளர் Ian Stewart தெரிவித்துள்ளார்.
Read More »ட்விட்டர் ஆன்ட்ராய்டு செயலியில் அற்புத அம்சங்கள்!
ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான ட்விட்டர் செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. ட்விட்டர் ஆன்ட்ராய்டு தளத்தில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ட்வீட் எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது, வீடியோ பிளேபேக் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகிறது. எனினும் இந்த அம்சங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த அம்சங்கள் ஒருவேளை சோதனையிலோ அல்லது ஒவ்வொரு கட்டமாக வழங்கப்படலாம் என தெரிகிறது. இதனால் புது அம்சங்களை அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க சில காலம் ஆகும். புது வீடியோ ...
Read More »