சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரிகளுக்கு தங்குவதற்கு வீடு பெற்றுக் கொடுப்பதற்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்த இளைஞனை கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஐ.எம். றிஸ்வான் புதன்கிழமை (22) விடுதலை செய்துள்ளார். சஹ்ரான் குழுவினருக்கு வீடு பெற்றுக் கொடுப்பதற்கு உதவி புரிந்துள்ளாரென சந்தேகத்தின் பேரில் கடந்த 02 வாரங்களுக்கு முன்னர் பொலிஸாரினாலும், குற்றப்புலனாய்வு அதிகாரிகளாலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குறித்த இளைஞன்கைது ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு! – மந்திரி பதவி விலகல்!
பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ...
Read More »அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவான போராட்டம் ஓயாது!
இலங்கைக்கு திருப்பி அனுப்பபடவுள்ள நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினருக்கு ஆதரவாக தொடர்ந்தும் போராட்டம் நடத்திவரப்படுகின்றது. லிபரல் கூட்டணி ஆட்சிபீடமேறினாலும் தங்களது முயற்சியில் தாங்கள் சோர்ந்துவிடவில்லை என நடேசலிங்கம், பிரியா குடும்பத்தினரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளார்கள். பிரதமர் Scott Morrison, உள்துறை அமைச்சர் Peter Dutton உட்பட அரசின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தினரின் நாடுகடத்தலை தடுக்கக்கோரும் மின்னஞ்சல்களையும் வேண்டுகோள்களையும் தொடர்ந்தும் அனுப்பிவருவதாக ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். நாங்கள் வாக்களித்துள்ள அரசியல்வாதிகள் எங்களது குரலுக்கு செவிசாய்க்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை ...
Read More »மீண்டும் பிரதமராகிறார் மோடி! பா.ஜ.க. 300 தொகுதிகளில் முன்னிலை!
மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள். 91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் ...
Read More »தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்கும்!-சீ.வீ.கே.
சிறிலங்கா அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார். இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் ...
Read More »கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு!
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த சந்தேகத்தில் தர்காநகர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அளுத்கம காவல் துறையால் தர்காநகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட போது, தற்கொலை குண்டுதாரியான மொஹமட் பசீர் மொஹமட் பஸ்ஹான் என்பவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர் ...
Read More »எதிர்பாரா விதமாக தங்கக் கட்டி ஒன்றை கண்டுபிடித்த அவுஸ்திரேலியர்!
அவுஸ்திரேலியாவின் கல்கூர்லி (Kalgoorlie) பகுதியை சேர்ந்த நபருக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. தங்கச் சுரங்கத்திற்கு அருகே உலோகம் கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு 100,000 அவுஸ்திரேலிய டொலர் மதிப்புள்ள தங்கக் கட்டி ஒன்றை குறித்த நபர் தோண்டியெடுத்துள்ளார். பொழுதுபோக்குக்காக எதையோ தேடிச் செல்லும் போது குறித்த எதிர்பாரா விதமாக அந்தப் பரிசு கிடைத்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். அவுஸ்திரேலியாவில் தோண்டியெடுக்கப்படும் முக்கால்வாசித் தங்கம் கல்கூர்லியிலும், அதனைச் சுற்றியப் பகுதிகளிலும் கிடைக்கிறது. அதனால் அங்கு அவ்வப்போது சிறு சிறு தங்கக் கட்டிகள் மக்களுக்குக் கிடைப்பது வழக்கம் ...
Read More »அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சிறிலங்கா பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்!
சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதேவேளை இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் டொஷிஹிரோ கிடமுறவுடனான சந்திப்பொன்றையும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட நேற்யை தினம் மேற்கொண்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஜப்பானிய பிரதித் தூதுவர் மற்றும் பாதுகாப்பு ...
Read More »அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகளையடுத்து ஆறு அகதிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு!
மனுஸ் தீவுகளிலும் நவ்றுவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளில் ஆறு பேர் தற்கொலைக்கு முயன்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ஸ்கொட் மொறிசன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. மனுஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான நோய்வாய்ப்பட்டுள்ள நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றார். சூடானை சேர்ந்த அகதி அப்துல் அசீஸ் முகமட் இந்த விடயத்தை தனது டுவிட்டரில் பதிவு ...
Read More »இராஜினாமா செய்யத் தயார் – ரிஷாத்
சிறிலங்கா ஜனாதிபதியும் பிரதமரும் கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்வதற்கு நான் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும் எனது கட்சியை சேர்ந்த இரண்டு பிரதி அமைச்சர்களும் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனத்தில் அமர்வதற்கு தயாராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார். சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ...
Read More »