சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதேவேளை இலங்கைக்கான ஜப்பானிய பிரதித் தூதுவர் டொஷிஹிரோ கிடமுறவுடனான சந்திப்பொன்றையும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொட நேற்யை தினம் மேற்கொண்டிருந்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஜப்பானிய பிரதித் தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சினது இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் டீ.ஜே.கொடிதுவக்குவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal