உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்தாரிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்த சந்தேகத்தில் தர்காநகர் பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அளுத்கம காவல் துறையால் தர்காநகரில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
அவர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட போது, தற்கொலை குண்டுதாரியான மொஹமட் பசீர் மொஹமட் பஸ்ஹான் என்பவருடன் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal