சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். பெரும்பாலும் இம் மாதத்தின் இரண்டாம் வாரம் அளவில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாக இது அமைந்துள்ளது. கடந்த மாதம் சீனத் தூதுவர் மூலம் சீனாவுக்கு வருமாறு அந் நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் விடுத்த அழைப்புக்கு இணங்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
ரூமி மொஹமட்டுக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இணைந்து சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான தகவலை வெளிப்படுத்திய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள முதலிரண்டு சந்தேக நபர்களுக்கும், அச் சந்திப்பில் கலந்துகொள்ள தலா 10 இலட்சம் ரூபா வீதம் 20 இலட்சம் ...
Read More »மீண்டும் அணுஆயுத சோதனை- வடகொரியா
அணுஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.உலகின் இரு எதிர்எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசினர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட அனைத்து வகையான அணுஆயுத சோதனைகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரியா வாக்குறுதி அளித்தது. அதன்படியே வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தியது. இதற்கு பிரதிபலனாக தங்கள் நாட்டின் மீது ...
Read More »இணைப்பாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (01.01.2020) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...
Read More »அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்!
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதான பொறுப்புடைய துறை என்ற ரீதியில் இராணுவமானது எச் சந்தர்ப்பத்திலும் ஏற்படக் கூடிய அனைத்து சவால்களையும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள புதிய இராணுவ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: முறையான பயிற்சி மூலமே உள்ளக அல்லது வெளிப்புற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய ...
Read More »ஆஸ்திரேலிய காட்டுத் தீ: வனவிலங்குகளைக் காப்பாற்றிய ஊழியர்கள்!
ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதற்கிடையில் வனவிலங்கு சரணாலாயம் ஒன்றிலிருந்து 200க்கும் அதிகமான வனவிலங்குகளை ஊழியர்கள் காப்பாற்றினர். ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது. காட்டுத் தீ காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தளங்களும், வனவிலங்கு சரணலாயங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. இந்த ...
Read More »புத்தாண்டில் சோகம்: இந்தோனேசியா மழை வெள்ளத்துக்கு 9 பேர் பலி!
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் ஜகார்த்தாவில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் நிலையில் இன்று 9 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகமெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தோனேசியாவில் மட்டும் சோகமான புத்தாண்டாகத் தொடங்கியுள்ளது. ஜகார்த்தா நீரில் வீடுகளும், கார்களும் மூழ்கின. மக்கள் சிறிய ரப்பர் லைஃப் படகுகள் அல்லது டயரின் உள் குழாய்களில் துடுப்பு செலுத்திச் செல்வதை தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. வணிக மற்றும் ராணுவ விமானங்களைக் கையாளும் ஹலிம் பெர்தானகுசுமா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கடுமையான வெள்ளம் ...
Read More »உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நியூசிலாந்து மக்கள்!
நியூசிலாந்து நாட்டு மக்கள் உலகில் முதன்முதலாக ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை இன்று வரவேற்று மகிழ்ந்தனர். * நியூசிலாந்து மக்கள் உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடினர். * அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றனர். * கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கைகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் ...
Read More »நிலக்கரியினால் சூழலுக்கு மோசமான விளைவுகள்!
மின் உற்பத்திக்காக எரிசக்தி மூலங்களை பயன்படுத்த வேண்டிய நிலை தற்போது நாட்டில் நிலவுகின்ற போதிலும் மக்களுக்கு தீங்கு இன்றிய வகையிலேயே உற்பத்திகள் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்த கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிலக்கரியினால் சூழலுக்கு மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிட்டார். சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தினால் நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; நிலக்கரி இயற்கை எரிவாயுவிற்கு அடுத்ததாக மூன்றாவது மாற்று மூலமாக ...
Read More »அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறது!
சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக தேசிய கீதமானது சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கடந்த ஆட்சியின்போது பாடப்பட்டு வந்தது. எனினும் தற்போது ஆட்சியில் உள்ள இந்த அரசாங்கமானது ஏன் இவ்வாறு இன நல்லுறவை முறிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு இந்த ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			