நியூசிலாந்து நாட்டு மக்கள் உலகில் முதன்முதலாக ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை இன்று வரவேற்று மகிழ்ந்தனர்.
* நியூசிலாந்து மக்கள் உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடினர்.
* அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றனர்.
* கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கைகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும்.
இந்நிலையில், (இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக 2020-ம் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக (இந்திய நேரப்படி இன்றிரவு சுமார் 8.30 மணியளவில்) ஜப்பான் நாட்டு மக்கள் உலகிலேயே 2-வதாக புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்வார்கள். அதன்பின், சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு பிறகு நமது நாட்டில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கவுள்ளது.
Eelamurasu Australia Online News Portal