ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 206- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் இன்னும் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காணப்படுகிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில்78 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளனர். 89 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். தலைநகர் ஆக்லாண்டில் மட்டும் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
டி20 உலக கோப்பை – குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சார்ஜாவில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியை 10 ரன்கள் வித்தியாசததில் வீழ்த்தினாலும், தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன், ஒரு முறை மோத வேண்டும். 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதிபெறும். ...
Read More »பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மனு ஒன்றைத் தாக்கல்
முத்துராஜவெல ஈரநிலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் முத்துராஜவெல ஈரநிலங்களில் ஏறத்தாழ 3,000 ஏக்கர் நிலங்களைக் கையளிக்கும் வர்த்தமானியைத் திரும்பப் பெறும் உத்தரவுக்காகவே உயர் நீதிமன்றத்தை மல்கம் ரஞ்சித் நாடியுள்ளார். பிரதிவாதிகளாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜங்க அமைச்சர் நாலக கொடஹெவா, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகாரசமை மற்றும் அதன் தலைவர், ...
Read More »வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் தீவிரம்
கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை இலக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இம்முறை வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பின்போது, பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. நிதியமைச்சின் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அபிப்பிராயங்களும் இதற்குப் பெறப்பட்டுள்ளன. கொவிட் வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரத்துக்குகு மிகுந்த அழுத்தம் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, கொவிட் சவால்களை வெற்றிகொண்டு, வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதனை லக்காகக் கொண்டு, எதிர்வரும் வரவு ...
Read More »தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீத இலக்கை எட்டியது
ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் என்று உயர்ந்துள்ளது. “மற்றொரு அற்புதமான இலக்கை எட்டியுள்ளோம்” என்று பிரதமர் இன்று காலை தெரிவித்தார். 6 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானோர் இப்போது COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போடப்பட்டுள்ளனர் என்று பிரதமர் Scott Morrison கூறினார். “அனைவருக்கும் மிக்க நன்றி. இது ஒரு பாரிய, தேசிய முயற்சி. இந்தப் பணி இத்துடன் ஓயவில்லை. விகிதாசார அடிப்படையில், தடுப்பூசியை அதிகம் போட்டுக் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் முதன்மை நிலையை நாம் ...
Read More »வாழ்வகம் தலைவருக்கு நேற்று ‘யாழ் விருது’ வழங்கப்பட்டது
யாழ் மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழுவால் நடத்தப்படும் 2021ஆம் ஆண்டுக்கான ‘நல்லைக் குமரன்’ வெளியீடும் ‘யாழ் விருது’ வழங்கும் நிகழ்வும் நேற்று(05) நாவலர் மண்டபத்தில் மாநகர ஆணையாளரும் யாழ். மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுத் தலைவருமான இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ண னும், சிறப்பு அதிதியாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரனும் பங்குபற்றினர். ஆசி உரைகளை நல்லை ஆதீன முதல்வர், வீணாகான குருபீட பீடாதிபதி சிவ ஶ்ரீ சபா வாசுதேவக் ...
Read More »ஒற்றுமைக்கான முயற்சிகளை இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது- மனோ ஹக்கீமிடம் சம்பந்தன்
“அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்.” “அந்த ஒற்றுமை முயற்சியை இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது. என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார் என மனோகணேசன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது முகநூல் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கு இடையே சந்திப்பு, கூட்டமைப்பு ...
Read More »அரசியல் தலையீடற்ற விசாரணை தேவை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி சுதந்திரமான வெளிப்படையான விசாரணை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நேற்று (04) தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள அரசியல் பின்னணி தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் உண்மை நிலையை நாட்டுக்கு ...
Read More »மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த அரசாங்கம்
வரலாறு காணாத அளவுக்கு மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசாங்கமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடக அமையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், “இந்த நாட்டில் உண்மையில் மிக மிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசாங்கம் என்று சொன்னால், அது இதுவாகத் தான் இருக்கும். “பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் ...
Read More »அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் விபத்து- 2 உயர் அதிகாரிகளை நீக்கியது அமெரிக்க கடற்படை
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் எப்படி விபத்தில் சிக்கியது? கடற்பகுதியில் அல்லது நீருக்கடியில் உள்ள மலை மீது மோதியதா? என்பது குறித்த முழுமையான விவரத்தை கடற்படை வெளியிடவில்லை. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் கடந்த மாதம் 2ம் தேதி தென்சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதி சேதமடைந்துள்ளது. இதில் மாலுமிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்த தகவலை 5 நாட்களுக்கு பிறகே கடற்படை வெளியிட்டது. விபத்தில் கப்பலுக்கு ...
Read More »