முத்துராஜவெல ஈரநிலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் முத்துராஜவெல ஈரநிலங்களில் ஏறத்தாழ 3,000 ஏக்கர் நிலங்களைக் கையளிக்கும் வர்த்தமானியைத் திரும்பப் பெறும் உத்தரவுக்காகவே உயர் நீதிமன்றத்தை மல்கம் ரஞ்சித் நாடியுள்ளார்.
பிரதிவாதிகளாக, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜங்க அமைச்சர் நாலக கொடஹெவா, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர, நகர அபிவிருத்தி அதிகாரசமை மற்றும் அதன் தலைவர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வத்தளை, நீர்கொழும்பு, ஜா எல மாவட்டச் செயலாளர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.