யாழ் மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழுவால் நடத்தப்படும் 2021ஆம் ஆண்டுக்கான ‘நல்லைக் குமரன்’ வெளியீடும் ‘யாழ் விருது’ வழங்கும் நிகழ்வும் நேற்று(05) நாவலர் மண்டபத்தில் மாநகர ஆணையாளரும் யாழ். மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுத் தலைவருமான இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ண னும், சிறப்பு அதிதியாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரனும் பங்குபற்றினர்.
ஆசி உரைகளை நல்லை ஆதீன முதல்வர், வீணாகான குருபீட பீடாதிபதி சிவ ஶ்ரீ சபா வாசுதேவக் குருக்கள், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் ஆகியோர் வழங்கினர்.
இவ்வாண்டுக்கான ‘யாழ் விருது’ வாழ்வகத் தலைவர் மதிப்பார்ந்த ஆ. ரவீந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நல்லைக்குமரன் மலர் -29 மாநகர முதல்வரால் வெளியிடப்பட்டது. நூலின் நயப்புரையை செந்தமிழ் சொல்லருவி ச.லதீசன் வழங்கினார்.
Eelamurasu Australia Online News Portal