மன்னார் ஆயர் இல்லம் ‘கொரோனா’ அச்சம் காரணமாக முழுமையாக மூடப்பட்டுள்ளது.ஆயர் இல்லத்திற்கான உட்செல்லும் அனுமதி மற்றும் வெளி செல்லும் அனுமதி அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்.. மன்னார் பட்டித்தோட்டம் என்ற பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த புதன் கிழமை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற போது குறித்த நபருக்கு எழுந்த மானமாக பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு நேற்று வியாழக்கிழமை இரவு கிடைக்கப் பெற்றது. அதற்கமைவாக ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
பருவ நிலை மாற்றத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராட நியூசிலந்துப் பிரதமர் உறுதி
பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராட நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Arden), உறுதியளித்துள்ளார். அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில், வெற்றிபெற்றால், நிலக்கரியைப் பயன்படுத்தும் கொதிகலன்களை தமது அரசாங்கம் நீக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர். 2025க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நீக்க உதவும் பேருந்துகளை வாங்க உள்ளூர் அமைப்புகளுக்கு 32.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கப்படும் என்று திருவாட்டி ஆர்டன் சொன்னார். வரும் தேர்தலில், ...
Read More »உலகிற்கு செய்த செயலிற்காக சீனா பெரும் விலையை செலுத்தும்- டிரம்ப் கடும் எச்சரிக்கை
உலகிற்கு செய்த விடயத்திற்காக சீனா பெரும் விலையை செலுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். புதன்கிழமை வெளியாகியுள்ள காணொளியில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். இது இடம்பெற்றது உங்களின் தவறினால் இல்லை என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் இது சீனாவின் தவறு என குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டிற்கு செய்தமைக்காகவும் சீனா பெரும் விலையை செலுத்தப்போகின்றது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பின் பின்னர் டிரம்ப் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவார் என சீனா எதிர்பார்த்திருந்தது என தெரிவித்துள்ள சிஎன்என் தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் ஈரானுக்கு ...
Read More »அதி உயர் அபாய வலயமாக வெயாங்கொட பிரதேசம்!
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள வெயாங்கொட பிரதேசத்தில் மிக அதிகளவான கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அந்தப் பிரதேசம் அதி உயர் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்ததாக அதிகளவிலான எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் தற்போது இனங்காணப்பட்டு வரும் நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read More »தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒற்றுமை இல்லா விட்டால் அரசை எதிர்த்து எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுப்பது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் உறுதிப்படுத்துங்கள் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளையினர் தெரிவித்துள்ளார்கள். இவ்விடையம் தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்டக் கிளை இன்று வியாழக்கிழமை (8) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதம கொரடா மற்றும் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் போன்ற பதவிகள் வழங்குவது தொடர்பான ...
Read More »இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் : பகல்-இரவு போட்டியுடன் தொடக்கம்?
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு போட்டியாக டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. ஒரு நாள் போட்டியுடன் தொடர் ஆரம்பிக்கும் என்று தெரிகிறது. பிரிஸ்பேனில் நவம்பர் 25-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் மூன்று ஒரு நாள் போட்டிகளையும், அடிலெய்டில் டிசம்பர் 4-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் மூன்று 20 ஓவர் போட்டிகளையும் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து ...
Read More »மனைவியையும், குழந்தையையும் கொலை செய்த தமிழர் தானும் தற்கொலை!
லண்டனில் உள்ள தொடர் மாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவியையும், மூன்று வயதான மகளையும் கோரமாகக் கொலை செய்த தமிழரான தந்தை ஒருவர், தானும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. இக்குடும்பத்தினர் மலேஷியத் தமிழர்கள் என லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று வயது சிறுவனும் அவரது தாயும் குறிப்பிட்ட தொடர்மாடி குடியிருப்பில் இறந்து கிடந்தனர், புதன்கிழமை காலை தகவல் அறிந்த பிரிட்டிஷ் காவல் துறை அந்த வீட்டுக்குள் நுளைந்தபோது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. ...
Read More »அவுஸ்திரேலிய காட்டில் விடப்பட்ட ‘டாஸ்மானியாவின் பேய்’
பாலூட்டி விலங்கினமான டாஸ்மானியாவின் பேய்(Tasmanian devil) 3,000 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய பெருநிலப் பரப்பில் மீண்டும் விடப்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்குப் பகுதியிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை விடுவித்துள்ளனர். டாஸ்மானியாவின் பேய் என்று அழைக்கப்படும் இந்த விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்கினம். இது எழுப்பும் அதீத ஒலிதான் இந்த விலங்கிற்கு இந்தப் பெயர் வரக் காரணம். மேலும் இந்த விலங்கு, விலங்குகளின் சடலங்களை வெறித்தனமாக தேடிச் சென்று, கடித்து நொறுக்கிவிடும். தனது தாடைகளின் சக்தியைக் கொண்டு ...
Read More »முற்றாக முடக்கப்பட்டது புங்குடுதீவு
யாழ். மாவட்டம், தற்போது ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலையில், எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவு முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்:- யாழ்.மாவட்டத்தில், கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, அவசரமாக மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தை நடத்தியிருந்தோம். இந்தச் ...
Read More »பாலச்சந்திரன் “ சிறுவர் படையணியின் தளபதி” என்கிறார் பொன்சேகா
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லவில்லை என சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா பிரபாகரன் மகன் சிறுவர் படையணியின் தளபதி எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தினர் பிஸ்கட் வழங்கிய பின்னர் பிரபாரகனின் மகனை கொன்றனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றம்சாட்டியவேளை அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனின் மனைவி விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா அவரது மூத்த மகன் விடுதலைப்புலிகள் ...
Read More »