பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராட நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Arden), உறுதியளித்துள்ளார்.
அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலில், வெற்றிபெற்றால், நிலக்கரியைப் பயன்படுத்தும் கொதிகலன்களை தமது அரசாங்கம் நீக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
2025க்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக நீக்க உதவும் பேருந்துகளை வாங்க உள்ளூர் அமைப்புகளுக்கு 32.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கப்படும் என்று திருவாட்டி ஆர்டன் சொன்னார்.
வரும் தேர்தலில், திருவாட்டி ஆர்டனின் தொழிலாளர் கட்சி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.