உலகிற்கு செய்த விடயத்திற்காக சீனா பெரும் விலையை செலுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். புதன்கிழமை வெளியாகியுள்ள காணொளியில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.
இது இடம்பெற்றது உங்களின் தவறினால் இல்லை என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் இது சீனாவின் தவறு என குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டிற்கு செய்தமைக்காகவும் சீனா பெரும் விலையை செலுத்தப்போகின்றது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பின் பின்னர் டிரம்ப் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவார் என சீனா எதிர்பார்த்திருந்தது என தெரிவித்துள்ள சிஎன்என் தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் ஈரானுக்கு எதிராக பயன்படுத்தியதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளது.
இராஜதந்திர ரீதியிலும் இராணுவரீதியிலும் அமெரிக்க சீன உறவுகள் பதட்டமான நிலையில் உள்ள ஒரு தருணத்தில் டிரம்பின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.