கிழக்கு மாகாணத்து மக்கள் தமது பிரச்சனைகளை ஒரே இடத்தில் முன்வைக்கும்பொருட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் ‘எழுக தமிழ் பேரணி’ நடாத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை மீட்கும் நோக்குடன் ஆக்கிரமிப்புப் படைகளை கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறக்கோரியும் குறித்த பேரணி நடைபெறவுள்ளது. அத்துடன், தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு சர்வதேச நீதி விசாரணையே தேவை என்பதை வலியுறுத்தியும், காணாமல் போனவர்களைக் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபருக்கு இரட்டை மரண தண்டனை
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது 2001 ஆம் ஆண்டு தாக்குதல் நடாத்தியமை தொடர்பான வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நெப்போலியன் எனும் நபர் பிரபல ஊடகவியலாளரான மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் ஆவார். கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி இரவு 8 மணியளவில் நிமலராஜன் வீட்டில் செய்தி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை சுட்டு படுகொலை செய்யப்பட்டார். குறித்த படுகொலையின் பிரதான சந்தேகநபர் நெப்போலியன் என பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் இனம் காணப்பட்டு கைது ...
Read More »வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் கூட்டமைப்புக்கு அக்கறையில்லை
வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். கொழும்பில் உள்ள மகாவலி கேந்திர மத்திய நிலையத்தில் ஊழியர் தொழிற்சங்கத்தின் 6 ஆவது பேராளர் மாநாட்டு அண்மையில் இடம்பெற்றது. இதில்க கலந்து கொண்டு கருத்துத் தெரிவிககையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவி்க்கையில், பலமுறை நான் ஊடகவியாளர்கள் பிரச்சினை தொடர்பாக வினா எழுப்பும் போது எம்மை விட்டுப்பிரிந்த ஊடகவியாளர்கள் தொடர்பாக மட்டுமே அவர்கள் பேசுகின்றனர். ...
Read More »யாழில் திலீபனின் நினைவு தூபியின் முன்பாக மாவீரர் நாள் நிகழ்வு
யாழில் இன்று காலை 9.45 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நல்லூருக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். அங்கு உரை நிகழத்திய ரெலோ இயக்கத்தின் தலைவர் சிவாஜிலிங்கம் தமிழீழ தேசிய விடுதலைப் போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் வீர மறவர்களிளிற்கும் ...
Read More »மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!
கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது. மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும். புலிகளையும் தமிழீழத்தையும் அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் போராளிகளின் கழுத்தில் இருந்த சயனட்டை ஒத்த நச்சுத்தன்மையோடும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும். எத்தகைய அடக்குமுறை வந்தபோதும் – மாவீரர் நாளில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் “தியாகத் திருவொளிகள்” இசைத்தொகுப்பு வெளியீடு!
தியாகத் திருவொளிகள் – 02 உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் மாவீரர் நாள் – 2023 இல், மாவீரர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள் – 2” என்ற இசைத்தொகுப்பு வெளியிட்டுவைக்கப்பட்டது. தங்களது உன்னதமான இன்னுயிரை எமது மக்களின் விடுதலைக்காக வித்தாக்கி மறைந்துபோன மாவீரர்களின் நினைவுகளில் நிறைந்திருக்கும் இன்றைய நாளில், அவர்கள் கனவுகளை சுமந்து “தியாகத் திருவொளிகள் – 2” என்ற இசைத்தொகுப்பை மாவீரர் நாள் – 2023 இல் வெளியிட்டு வைக்கின்றோம். தமிழீழத் தாயகத்தில் ...
Read More »யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களை நினைவு கூரும் சுவரொட்டிகள்!
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ மாவீரர் தினத்தை நினைவு கூரும் சுவரொட்டிகள் மீண்டும் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ மாவீரர் தினம் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்களால் ஆண்டு தோறும் நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர்ச்சியாக இவ்வாண்டும் மாவீரர் தினத்தை ஒட்டியதான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்தோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
Read More »எழுக தமிழ் பேரணி மட்டக்களப்பில் எதிர்வரும் ஜனவரி மாதம்
தமிழ் மக்கள் பேரவையால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின் இரண்டாவது பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வைத்தியக் கலாந்தி லக்ஸ்மன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் நேற்றைய தினம் கொழும்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், செயற்கையாக கட்டமைக்கப்பட்ட சூழ்நிலைகளாலும், நிர்ப்பந்தங்களாலும், அழுத்தங்களாலும், எமது மக்களின் நீதிக்கான பயணம் தடைப்படலாம் என்ற ஐயப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே அதனைத் தடுக்கும் வகையில் ...
Read More »பாதுகாப்புச் செயலரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்! -கலாநிதி சரத் விஜேசூரிய
சிறீலங்காப் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென நீதிக்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சரத் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு எதிராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறீசேனவிடம் தான் முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கலாநிதி சரத் விஜேசூரிய தெரிவித்தார். சிறீலங்காவில் ஆட்சி மாற்றத்துக்கு உதவிய சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய நீதிக்கான தேசிய அமைப்பின் ...
Read More »கொழும்பிலும் தமிழ் மக்கள் பேரவையின் ஊடகமாநாடு
தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் கோரிக்கைகள் தொடர்பில் தெற்கு மக்களிற்கு விளக்கமளிக்க ஊடக சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வடக்குகிழக்கில் உள்ள தமிழ் சிவில் பிரதிநிதிகளையும் கல்விமான்களையும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியதான தமிழ் மக்கள் பேரவை அமைப்பு கடந்த 24.09.2016 இல் “எழுகதமிழ்”என்ற நிகழ்வொன்றை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து அதில் வடக்குகிழக்கு மக்களின் அன்றாட மற்றும் அடிப்படைப்பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நடைபெற்ற ஊர்வலம் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது யாவரும் அறிந்ததே. இப் பேரணியானது தென் பகுதியில் உள்ளகுறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலதரப்பட்ட கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் ...
Read More »