கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குவது கேமரூன் நாடு. அந்த நாட்டில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் இன்று உள்ளே புகுந்தனர். அங்கு படித்து வந்த 10 முதல் 14 ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை!
ஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்கு ஊழல் தடுப்பு வழக்குகளில் விசாரணை நடத்தவும், கைது வாரண்டுகள் பிறப்பிக்கவும், பயண தடை விதிக்கவும், நிதி பரிமாற்றங்களை தடுக்கவும், வங்கி கணக்குகளை முடக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த குழு உடனடியாக அங்கு பல இளவரசர்களை ...
Read More »அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட அசம்பாவிதம்!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவல் சம்பவத்தில் பல வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலை கட்டிடம் ஒன்றும் தீக்கிரையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிர்ச் சேதங்களோ, காயங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. சுமார் 100 தீயணைப்பு படை வீரர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீயின் காரணமாக தொழிற்சாலை கட்டிடங்களுக்குள் உள்ள போத்தல்களும், பிற பொருட்களும் வெடித்துச் சிதறுவதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
Read More »மைத்திரியின் செயற்பாடு அரசியலமைப்பை மீறும்செயல்!- வி.ரி.தமிழ்மாறன்
பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அதன் முழுவடிவம் வருமாறு. 19ஆவது திருத்தத்தின் பின்னணி 2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்/ தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டமையால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றது. ...
Read More »தடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை!
எங்கள் நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேசினர். உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய ...
Read More »5ஜி ஐபோன் வெளியீட்டு தகவல்!
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஆயத்தமாகி இருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். தரப்பில் இருந்து 5ஜி சாதனம் குறித்த தகவல்கள் மர்மமாக இருந்து வந்த நிலையில் 5ஜி ஐபோன் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் ...
Read More »96 -விமர்சனம்
யகன் விஜய் சேதுபதி, கதாநாயகி திரிஷா, டைரக்ஷன்: சி.பிரேம்குமார், தயாரிப்பு எஸ்.நந்தகோபால். எப்போதாவது வரும் அபூர்வமான காதல் படங்களில், இதுவும் ஒன்று. படம் 96 சினிமா விமர்சனம் பார்க்கலாம். விஜய் சேதுபதி, புகைப்பட கலையை கற்றுக் கொடுக்கும் நபர். தனது மாணவர்-மாணவிகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான தஞ்சைக்கு புகைப்படம் எடுக்க வருகிறார். அவர் படித்த பள்ளிக்கூடத்துக்கு வரும்போது, பழைய நினைவுகள் எட்டிப் பார்க்கின்றன. அங்கிருந்து தனது பள்ளி நண்பர்களுடன் போனில் பேசுகிறார். அப்போது, 96-ம் வருடத்தில் படித்த பழைய மாணவர்-மாணவிகள் அனைவரும் குறிப்பிட்ட ...
Read More »சிவசக்தி ஆனந்தன் மீது மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்ய செல்வம் தீர்மானம்!
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது 150 கோடி நஸ்டஈடு கேட்டு மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு 150 கோடி செல்வம் அடைக்கலநாதன் பெற்றதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நேற்றைய தினம் ஊடகமொன்றிற்கு சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற உறுப்பினர் நான் 150 கோடி பெற்றுக் கொண்டதாகவும் அது ...
Read More »ரணிலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு!
தற்போதைய சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசுக்கு எதிராக ஐ.தே.க.வினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை நேற்று சபாநாயகரிடம் கையளித்தது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கையெழுத்திட்டு சபாநாயகரிடம் நேற்று கையளிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் போது குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென சபாநாயகர் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லா ...
Read More »மலேசிய உயர் அதிகாரிகள் மாபெரும் ஊழல்!
முன்னாள் பிரதமருடன் சேர்ந்து அரசு பணத்தை கொள்ளையடித்து, மலேசிய உயர் அதிகாரிகள் மாபெரும் ஊழலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆட்சி செய்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. பிரதமராக இருந்து வந்த நஜிப் ரசாக் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு பணத்தை பெருமளவில் கொள்ளையடித்து விட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக அரசின் 1 எம்.டி.எப். என்னும் மலேசிய வளர்ச்சி பெர்ஹாட் ...
Read More »