பிரதமர் நியமனத்தில் தனக்கு இல்லாத அதிகாரங்களை தற்துணிவின் அடிப்படையில் ஜனாதிபதி பயன்படுத்துவது வேடிக்கையானது என்பதோடு அரசியலமைப்பினை மீறும் செயலாகவுள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் வரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார்.
அதன் முழுவடிவம் வருமாறு.
19ஆவது திருத்தத்தின் பின்னணி
2015இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திபாலசிறிசேன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்/ தான் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டமையால் ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் தான் மக்களின் ஆணை கிடைக்கப்பெற்றது.
அரசியலமைப்பில் அடிக்கடி திருத்தங்களை செய்ய முடியாது. அரசியலி;ல் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றபோது தான் அத்தகைய திருத்தங்களைச் செய்ய முடியும். அந்த வகையில் தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு வழங்கிய வக்குறுதியை நிறைவேற்றும் வகையிலேயே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல் ரீதியாக வரலாற்றுத்திருப்பமொன்று நிகழ்ந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள அரசியலமைப்பத் திருத்தத்தினை மக்கள் ஆணையை புறந்தள்ளிப் பொருள்கோடல் செய்ய முடியாது.
அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படுவதென்பதுரூபவ் அரசியல் சமுதாயத்தினுடைய தேவை கருதி, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில விழுமியங்களின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே அதனைப் பொருள்கோடல் செய்கின்றபோது விழுமியங்களை அகற்றி பொருள்கோடல் செய்ய முடியாது. இதற்கு உலக நாடுகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கள் பலவுள்ளன.
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரத்தினை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக அவை முழுமை அடைந்திருக்கவில்லை. ஆனாலும் அந்த தீர்ப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு மட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பகுதியளவில் குறைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னரே 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டமையினால் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் அச்சட்டத்தின் ஏற்பாடுகளை கடந்து செயற்படுவதற்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லை. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் 19ஆவது திருத்தம்செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து விலகிய பின்னர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறலாம். ஆனால் 19ஆவது திருத்தம் மக்கள் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் முழு ஒப்பதலோடு மேற்கொள்ளப்பட்ட விடயமொன்றாகும்.
கூட்டு எதிர்க்கட்சியின் கருத்து 19ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதியால் பிரதமரை நீக்கும் அதிகாரம் இல்லது செய்யப்பட்டுள்ளதாக பகிரங்கமாக தெரிவித்த கருத்துக்கள் பதிவாகியுள்ளன. அவர்கள் கருத்துக்களை தெரிவித்ததன் பிரகாரம் 19ஆவது திருத்தத்தின் விளைவு இவ்வாறு தான் இருக்கும் என்பதை அவர்களே நன்கு உணர்ந்துள்ளார்கள். ஆனால் தற்போது பல்வேறு அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக புதிய பிரதமர் நியமிக்கப்படும்
அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரதமர் பதவியில் யார் இருக்கின்றார் என்பதை விட மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்டத் ருத்தத்தினை ஜனாதிபதி பின்பற்றியுள்ளாரா? ஜனநாயக ஆட்சி முறைமைக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையா? போன்ற விடயங்களையே அதீத கவனத்தில் கொள்ள வேண்டியதாகின்றது.
ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடு
அரசியல் ரீதியாக ஜனாதிபதிக்கு எத்தகைய நிர்ப்பந்தங்கள் இருந்தாலும் ஜனநாயக ஆட்சி முறைமைக்கு களங்கம் ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே புதிய பிரதமர் நியமனத்தினை கொள்ள வேண்டியுள்ளது.
எந்த விழுமியங்களை பாதுகாப்பதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டதோ அவற்றையெல்லாம் சிதறடிக்கும் வகையிலேயே மேற்படி நியமனச் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெவ்வேறு சொற்பதங்கள் காணப்படுவதாக தற்போது கூறப்பட்டாலும் இது சொற்பிரயோகங்களை மட்டும் வைத்துக்கொண்டு பொருள்கோடல் செய்கின்ற விடயம் அல்ல. மக்கள் ஆணையுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். அரசியல் அதிகாரங்களை தீர்மானிக்கின்ற விடயம் என்பதால் சதாரண சட்டங்களை பொருள்கோடல் செய்வது போன்று இங்கு பொருள்கோடல் செய்ய முடியாது.
பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள்
19ஆவது திருத்தச்சட்டம் உள்ளீர்க்கப்பட்டதன் பின்னர் எத்தனையோ விடயங்களில் திரும்பத்திரும்ப அதிகாரங்கள் குறைப்புக்கள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது. முன்னதாக 47ஆவது சரத்தின் ‘அ’ உப பிரிவில் ஜனாதிபதி பிரதமரை எழுத்து மூலம் நீக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. 19ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கத்தின் பின்னர் இந்த ஏற்பாடு முற்றாகவே அகற்றப்பட்டுள்ளது. 46ஆவது சரத்தின் 2ஆவது உபபிரிவில் பிரதமர் பதவி இழக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் கூறப்பட்டுள்ளன.
தனது கைப்பட பிரதமர் ஜனாதிபதிக்கு இராஜினாமாக் கடிதத்தினை எழுதுதல் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதொழிதல் ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் தான் பிரதமர் பதவி இழப்பார். அங்கு எந்த ஏற்பாடுகளிலும் ஜனாதிபதிக்கு பதவிநீக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் நீக்கப்பட்ட அதிகாரத்தினை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்வது வேடிக்கையானது. 48ஆவது சரத்தின் 2ஆவது உபபிரிவின் படிரூபவ் வரவுசெலவுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டால் அல்லது அரசாங்கத்திற்கு மேல் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால்ரூபவ் அல்லது அரசாங்கத்தின் கொள்கைக் கூற்று நிராகரிக்கப்படுதல் ஆகிய காரணங்களின் பிரகாரமே பிரதமரின் பதவி இழக்கப்படும்.
இந்த மூன்று சந்தர்ப்பங்களை விட ஏறெந்த ஏற்பாடுகளும் இல்லை. சிங்கள மொழியில் அகற்றுதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மேற்படி மூன்று சந்தர்ப்பங்கள் இல்லாதபோது பிரதமர் பதவி இழக்கமாட்டார். மேலும் இந்த ஏற்பாடுகள் பிரித்தானிய பாராளுமன்றத்தினைப் பின்பற்றியதாக காணப்படுகின்றது. புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு முரண் புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டவாறு நடைபெற்றதொன்றல்ல. உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனத்தினை கேள்விக்கு உட்படுத்தினால் 19ஆவது திருத்தச்சட்டத்தினை
பொருள்கோடல் செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியும். அதேநேரம் ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் மீது அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடுக்கப்பட முடியும் என்ற ஏற்பாடு அமுலாக்கப்பட்டுள்ளது. அது கூட ஜனாதிபதிக்கு காணப்பட்ட நிறைவேற்று அதிகாரத்தினை மட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தான் கொண்டுவரப்பட்டது. அதன்பிராகரம் அரசியலமைப்பினை அவர் மீறியிருந்தார் என்றால் சாதாரண பிரஜை ஒருவர் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும்.அரச அரசாங்க அமைச்சரவை முப்படை ஆகியவற்றின் தலைவராக இருக்கும் ஜனாதிபதி தான் ஒரு தீர்மானத்தினை எடுத்ததன் பின்னர் அதனை செயற்படுத்துவதற்கான பாராளுமன்றம் அமைச்சரவை ஆகியவற்றின் தீர்மானம் இன்றி தன்னிச்சையாக செயற்பட முனைதல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடயமாகும். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு இது முற்றிலும் விரோதமானது.
19ஆவது திருத்தச்சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி தற்துணிவின் பிரகாரம் தான் விரும்பியபடி தீர்மானம் எடுக்க முடியாது. அவ்வாறு இருக்கையில் பிரதமராக இல்லாத ஒருவருக்கு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்று ஜனாதிபதி அபிப்பிராயம் கொள்வதற்கு ஏதுவான காரணங்கள் கூறப்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி தனக்கு ஏற்பட்ட உயிராபத்து அரசியல் முரண்பாடுகள் பொருளாதார பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டினாரே தவிர மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கை உள்ளதால் அவரை நியமிக்கின்றேன் என்று எந்தவொரு இடத்திலும் கூறவில்லை.
ஆகவே 42ஆவது சரத்தின் 4ஆவது உப பிரிவில் குறிப்பிட்டதற்கு அமைவாக புதிய பிரதமரின் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை. அதன்பிரகாரம் இதுவொரு அரசியல் தீர்மானமே தவிர அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்மானம் அல்ல. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நம்பிக்கையை காண்பிக்காதவிடத்தில் புதிய பிரதமர் பதவி துறக்க வேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதி நம்பிக்கையை பெற்றவராக யார் காணப்படுகின்றாரோ அவரை பிரதமராக நியமிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் குறித்த அதிகாரங்கள்
19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தினை கலைக்க முடியாது. அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் பிராகாரம் பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கான ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனால் அது எந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படுகின்றது என்பது தான் முக்கியமானது. தேசிய ரீதியில் பாரிய பிரச்சினைகள் எழுகின்றபோது பாராளுமன்றத்தினை ஒத்திவைக்க முடியும். ஆனால் தற்போது பிரதமரை பதவிநீக்கம் செய்து புதிய பிரதமரை நியமித்துள்ள நிலையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதானது நன்நோக்கத்தின் அடிப்படையில் செய்யப்படவில்லை.
அரசரூபவ் அரசாங்கரூபவ் அமைச்சரவைரூபவ் முப்படைகள்ரூபவ் கட்சி ஆகிய ஐந்து கட்டமைப்புக்களின் தலைவராக ஒருவரே இருக்கின்றார். உலகத்தில் கூட இத்தகைய அதிகாரங்களைக் கொண்ட ஒருவர் இல்லை. கடந்த கால அனுபவங்களின் பிரகாரம் இத்தகைய அதிகாரங்களை கொண்டவர்களின் செயற்பாடுகளை அனுபவரீதியாக பார்த்துள்ளோம். ஜனாதிபதி பதவி துறந்தால்?
ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையை நிரூயஅp;பித்தால் ஒருமணிநேரம் கூட பதவியில் நீடிக்க இமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். ஜனாதிபதி தனது கைப்பட இராஜினாமாக்கடிதத்தினை சபாநாயகருக்கு எழுதுவதன் மூலம் பதவி துறக்கலாம்.
அவ்வாறு ஜனாதிபதி வெற்றிடமானால் 40ஆவது சரத்தின் முதலாம் உபபிரிவு ‘ஏ’ இன் பிரகாரம்ரூபவ் பாராளுமன்றம் தன்னுடைய உறுப்பினர்களில் ஒருவரை குறித்த பதவிக்கு தகுதியானவர் எனக் கருதும் பட்சத்தில் அவரைத் தெரிந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் எஞ்சிய காலத்தில் ஜனாதிபதியாக இருப்பார் என்பதோடு ஒருமாதகாலத்திற்குள் அந்தத் தெரிவு இடம்பெற வேண்டும்.
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதாக ஐ.தே.க.தரப்பினர் கூறுகின்றார்கள். அவ்வாறு கொண்டு வரப்படுகின்ற போது நீதித்துறை சார்ந்த பல விடயங்கள் இருக்கின்றன. ஆகவே அதற்கான உடனடிச்சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளது.
கட்சிதாவுதல்கட்சிதாவுதல் குறித்த மட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனினும் அதுதொடர்பான தீர்ப்புக்களை குறித்த உறுப்பினர்கள் சவாலுக்கு உட்படுத்த முடியும். லலித்அத்துலத்முதலிரூபவ் காமினி திஸநாயக்க போன்றவர்கள் பதவி துறக்கும்போது ஒரு நிலைமை ஏற்பட்டது. இருப்பினும் அத்தகைய விடயங்கள் பெரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. அதுதொடர்பில் வழக்குத் தொடரப்படுகின்போதுரூபவ் நீண்டகாலம் செல்வதால் அதற்குள் பாராளுமன்ற காலமே நிறைவுக்கு வந்துவிடுகிறது. கட்சிதாவலுக்கு எதிரான சட்ட ஏற்பாடு காணப்படுகின்றபோதும் இந்தியாவில் அச்சட்டத்தின் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வலிதானது செயற்படவில்லை.
பிரான்ஸ் நாட்டினை எடுத்துக்கொண்டால் அமைச்சரவை வேறாகவும்ரூபவ் பாராளுமன்றம் வேறாகவும் உள்ளது. ஆவே அங்கு ஒருவரை அமைச்சராக்குகின்றேன் என்று கூறி அவருடைய வாக்கினை பாராளுமன்றத்தில் பெற முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சராவாராக இருந்தால் அவருடைய பாராளுமன்ற ஆசனம் வெற்றியடமாகி பிறிதொருவரே நியமிக்கப்படுகிறார்.
ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. பதவிகளை வழங்குவதன் மூலமும் பெரும்பான்மையை காண்பிக்க முடியும்.
பொருள்கோடல் சட்டம்
பொருள்கோடல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் நியமிக்கும் அதிகாரம் இருக்கும் ஒருவருக்கு நீக்கும் அதிகாரம் இருக்கின்றதாக கூறப்படுகின்றது. அச்சட்டத்தின் உறுப்புரை 14(எப்) இன் பிரகாரம் அது பிரதமருக்கு ஏற்புடையதாகாது. அரசியலமைப்பில் தெளிவாக காணப்படுகின்றபோது ருள்கோடல் சட்டத்தினைப் பயன்படுத்த முடியாது. மேலும் பொருள்கோடல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கும் விடயங்கள் அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிரதமர்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாது. ஆகவே அவ்வாறான வாதத்தினையும் எடுத்துக்கொள்ள முடியாது.