5ஜி ஐபோன் வெளியீட்டு தகவல்!

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோனின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஆயத்தமாகி இருக்கும் நிலையில், ஐ.ஓ.எஸ். தரப்பில் இருந்து 5ஜி சாதனம் குறித்த தகவல்கள் மர்மமாக இருந்து வந்த நிலையில் 5ஜி ஐபோன் சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது.
அதன் படி ஆப்பிள் நிறுவனத்தின் முதல் 5ஜி ஐபோன் 2020ம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2020ம் ஆண்டு ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் 8161 5ஜி மோடெம் சிப்களை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஐபோன் மாடல்களுக்கான மோடெம்களை இன்டெல் முழுமையாக வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்டெல் நிறுவனம் 8060 மோடெம்களை உருவாக்கி வருவதாகவும் இவை 5ஜி ஐபோனில் சோதனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 8161 ரக சிப்செட் இன்டெல்லின் 10 நானோமீட்டர் வழிமுறையில் ஃபேப்ரிகேட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் போனில் கனெக்டிவிட்டி சீராவகவும் வேகமாக்க முடியும்.
சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி ஆப்பிள் நிறுவனம் இன்டெல் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக 8060 சிப்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவு வெப்பத்தை வெளியேற்றியது தான் என்றும் இதை சரி செய்வதில் இன்டெல் அதிகளவு சவால்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பிரபல டெலிகாம் சேவை வழங்கும் வெரிசான் மற்றும் எடி&டி உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி போன்களுக்கான சேவையை வழங்க மில்லிமீட்டர் அலைக்கற்றை ஸ்பெக்ட்ரத்தை நாடுகின்றன. மில்லிமீட்டர் அலைக்கற்றை ஸ்பெக்ட்ரம் அதிகளவு செயல்திறன் கொண்டவை ஆகும்.
இதனால் போனில் அதிகளவு வெப்பம் ஏற்படுவதோடு, வெப்பத்தை போனின் வெளியே உணர முடியும். இவ்வாறு ஏற்படும் போது போனின் பேட்டரி ஆயுள் பெருமளவு பாதிக்கப்படும். எனினும் ஆப்பிள் நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து 5ஜி மோடெம்களை விநியோகம் செய்ய முயற்சிக்கலாம்.
முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் மீடியாடெக் உடன் இணைந்து சிப் விநியோம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. எனினும் இது இரண்டாவது திட்டமாக இருக்கும் என்றும் இன்டெல் நிறுவனத்திற்கு போதுமான நேரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
5ஜி தொழிலநுட்பம் கொண்ட மொபைல் போன்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம். ஒப்போ, ஹூவாய் மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களின் 5ஜி மோடெம் சிப்களை குவால்காம் விநியோகம் செய்கிறது.