தேர்தலில் வெற்றிபெற்றால் கிழக்கு மாகாண அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுதியளித்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.<br /> தற்போது சிறையில் உள்ள பிள்ளையான் தேர்தலில் போட்டியிடுகின்றார். பிள்ளையான் தேர்தலில் வெற்றிபெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வாக்குறுதியளித்துள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானால் மாத்திரமே அமைச்சர் பதவியை வழங்கமுடியும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
எமக்கு புலம்பெயர் உறவுகளிடம் இருக்கும் செல்வாக்கைக் குறைக்க சதி
புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பவுள்ளனர் என நம்பத்தகுந்த நபர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் பொதுத் தேர்தலில் எம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வெற்றியை ஏதோ ஒரு விதத்தில் தடுப்பதற்கு அரச முகவர்களும், எமக்குப் போட்டியாக உள்ள ஏனைய ...
Read More »‘ராஜபக்ஷக்களின் ஒட்டுமொத்த குடும்பமுமே மாபியா’
ராஜபக்ஷாக்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஹெரோயின் படை, எதனோல் மாஃபியா படை, மணல் கொள்கை உள்ளடங்கலான பல்வேறு செயற்பாடுகளினால் சூழலை மாசுபடுத்தும் படை, பாதாள உலகக்குழுக்கள் ஆகிய நாற்படைகளை மையப்படுத்தியே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் ஆற்றிய உரையின் காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் சம்பிக்க ரணவக்க பகிர்ந்திருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்த நாட்டை நன்கு கற்ற, அறிவுடையவர்களே நிர்வகிக்கப்போகின்றார்கள் என்பதுதான் மக்களுக்கு வழங்கப்பட்ட மிகநீண்ட ...
Read More »சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் மர்ம விதைகள்
சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சலில் வரும் மர்ம விதைகள் குறித்து விவசாயத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது வரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் உயிரை இழந்துள்ளனர். இன்னும் இந்த நோயின் தாக்கம் ஒரு சில நாடுகளில் தீவிரமாகி தான் வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் இருந்து தான் அனைத்து நாடுகளுக்கு பரவியது.ஆனால், சீனா தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு ...
Read More »சுமந்திரன் இராணுவஆட்சியொன்றை நடத்துகின்றார்
சுமந்திரன் இராணுவஆட்சியொன்றை நடத்துகின்றார் என வேட்பாளா எம்.கே சிவாஜிலிங்கம் திருகோணமலையில் கருத்து வெளியிட்டுள்ளார். தேர்தல் பிரச்சார சந்திப்பொன்றில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சுமந்திரனுடன் 20 விசேட அதிரடிப்படையினருடன் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இராணுவஆட்சிஎனசொல்லக்கூடியளவிற்கு சுமந்திரனின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள சிவாஜிலிங்கம் இவ்வாறான நிலையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் இராணுவ ஆட்சியை எதிர்ப்பது வேடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தினை நடத்தமுடியாத பலவீனமான நிலையிலுள்ளது எனவும் அவர் ...
Read More »காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அச்சுறுத்திய புலனாய்வுப் பிரிவினர்!
யாழ்ப்பணத்தில் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொண்ட துண்டுப்பிரசுரங்கள் கையளிக்கும் நிகழ்வில் புலனாய்வுப் பிரிவினர் சூழ்ந்து கொண்டமையினால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலைமை காணப்பட்டது. வவுனியா காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கியிருந்தனர். இந்த இடத்திற்கு வந்த ஏராளமான புலனாய்வாளர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிய காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கையடக்க தொலைபேசிகள் ஊடாக ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான ...
Read More »நல்லூரை ஆக்கிரமிக்கும் இராணுவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவல் துறையில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் மீளப்பெறப்பட்டு, இராணுவத்தினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம் பெற்று வருகிறது. எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வைரவர் சாந்தி உற்சவத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வீதித் தடைகள், அடியவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் வருடா வருடம் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் ...
Read More »பிரியா – நடேசன் குடும்பம் தொடர்பிலான அவுஸ்திரேலிய அமைச்சர் டட்டனின் கூற்றுக்கு சட்டத்தரணி பதிலடி
பிரியா ; நடேசன் குடும்பத்தினரால் ஆஸ்திரேலிய அரசுக்கு ஒரு கோடி டொலர் செலவாகியுள்ளது என்றும், இந்தப்பணம் நாட்டு முன்னேற்றத்துக்காக பயன்படுத்தப்படவேண்டியது என்றும், வாய்ப்புக்கள் அனைத்தும் தீர்ந்துபோன பிறகும் நாடு திரும்புவதற்கு அடம்பிடிக்கும் ப்ரியா நடேசன் குடும்பத்தினால் நாட்டு மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியா ; நடேசன் குடும்பத்தினரின் சார்பாக வழக்கை முன்னெடுத்துவரும் சட்டத்தரணி அவ்வளவு பெருந்தொகைப்பணத்தை செலவுசெய்து அந்தக்குடும்பத்தினை எப்படியாவது நாட்டைவிட்டு துரத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருபவர் பீற்றர் டட்டனே ...
Read More »மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்டார் பிரியா
உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த தமிழரான பிரியாவை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பிரியாவின் உடல்நிலை மோசமடைகின்றது இதன் காhரணமாக அவரை கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டுசெல்லக்கூடாது என மருத்துவர்கள் வாதிட்டுவந்த நிலையிலேயே அதிகாரிகள் அவரை பலவந்தமாக கிறிஸ்மஸ்தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியாவை மருத்துவபரிசோதனைக்காக கொண்டு செல்லதிட்டமிட்டிருந்தனர்,ஆனால் அதற்கு சில மணிநேரத்துக்கு எல்லை காவல் படையினர் தலையிட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை விமானநிலையத்துக்கு ...
Read More »சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் ஆஸ்திரேலிய கும்பல்
ஆஸ்திரேலியாவில் படித்து வரும் சீன மாணவர்களை குறி வைத்து கடத்தும் கும்பல் அவர்களை மிரட்டி கோடிகணக்கில் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஏராளமான சீன மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் சீன மாணவர்கள் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பணக்காரக சீன மாணவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் ஆஸ்திரேலிய கும்பல் ஒன்று அவர்களை குறி வைத்து கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் போலீஸ் துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகள் போல மாணவர்களை இந்த கும்பல் போனில் தொடர்பு ...
Read More »