சுமந்திரன் இராணுவஆட்சியொன்றை நடத்துகின்றார் என வேட்பாளா எம்.கே சிவாஜிலிங்கம் திருகோணமலையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சார சந்திப்பொன்றில் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சுமந்திரனுடன் 20 விசேட அதிரடிப்படையினருடன் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இராணுவஆட்சிஎனசொல்லக்கூடியளவிற்கு சுமந்திரனின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள சிவாஜிலிங்கம் இவ்வாறான நிலையில் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் இராணுவ ஆட்சியை எதிர்ப்பது வேடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தினை நடத்தமுடியாத பலவீனமான நிலையிலுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal