யாழ்ப்பணத்தில் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொண்ட துண்டுப்பிரசுரங்கள் கையளிக்கும் நிகழ்வில் புலனாய்வுப் பிரிவினர் சூழ்ந்து கொண்டமையினால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலைமை காணப்பட்டது.
வவுனியா காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் வழங்கியிருந்தனர்.
இந்த இடத்திற்கு வந்த ஏராளமான புலனாய்வாளர்கள் துண்டுப்பிரசுரங்கள் வழங்கிய காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கையடக்க தொலைபேசிகள் ஊடாக ஒளிப்படங்கள் எடுத்து அச்சுறுத்தினார்கள்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலைமை காணப்பட்டதுடன்.அவ்விடத்தில் நின்றவர்களின் விபரங்களையும் சேகரித்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal
