கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சஃபாரி சுற்றுலாவை மேற்கொள்ளக்கூடிய வசதி கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றலாப் பயணிகளுக்கு அறுகம் குடா மற்றும் திருகோணமலை போன்ற நகரங்களில் சுற்றுலா மேற்கொள்வதற்கு மேலதிகமாக, பானம பகுதியிலும் சஃபாரி சுற்றுலா மேற்கொள்ள முடியும். அறுகம் குடாவிலிருந்து 14 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாக பானம திகழ்வதுடன் கொழும்பிலிருந்து 8 ...
Read More »Tag Archives: ஆசிரியர்தெரிவு
தாய்லாந்து குகை மீட்புப் பணி!- பிரமிக்கவைத்த ஓவியக் கலைஞர்கள்!
தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க நடைபெற்ற பணிகளை அந்நாட்டு ஓவியக் கலைஞர்கள் தத்ரூபமாகச் சுவரில் வரைந்து அசத்தியுள்ளனர். ஒரு மாதமாக தாய்லாந்து என்ற பெயரை உச்சரிக்காதவர்களே கிடையாது என்ற அளவுக்கு உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களும் அவர்களை மீட்க நடைபெற்ற பணிகளும்தான். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட மிகவும் திறமை வாய்ந்த மீட்புப் படையினர் 18 நாள்கள் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகிய 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ...
Read More »சிறிலங்காவில் இன்னமும் கொடூர சித்திரவதை! இன்று வெளியான ஐநா அறிக்கை!!
சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் முன்னேற்றகரமான மாற்றங்கள் உருவாகும் என்ற எண்ணம் இல்லாமல்போயுள்ளதாக ஐநாவின் இன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவின் விசேட பிரதிநிதியாக சிறிலங்காவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த பென் எமர்சன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதியான நீதிமன்ற நடைமுறைகளும் நல்லிணக்கமான சூழலும் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எந்தவித முன்னேற்றமும் இன்றி தங்கிநிற்பதாகவும் இன்னமும் கடுமையான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதன் காரணமாக எதுவித விசாரணகைளுமின்றி பத்து ...
Read More »சமுத்திரக்கனியின் ஆண் தேவதை!
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண் தேவதை வரும் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது. இயக்குனர் தாமிரா இயக்கத்தில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், அறங்காங்கி நிஷா, சுஜா வருணி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆண் தேவதை. உலகயமாக்கல், திருமண உறவுகள் மற்றும் நவீன உலகத்தில் குழந்தையை வளர்க்கும் சவால்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை பார்த்தாலே தெரியும். இன்றைய சமுதாயத்தில், கணவன் இல்லாமல் வாழும் திருமணமான பெண்கள் சந்திக்கும் விளைவுகள் தான் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படம் அடுத்த ...
Read More »காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த பெண்!
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் பார்வை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஷெர்லி பாட்டார். இவர் தனது கண் இமைகளுக்கு கண்மை பூசி அலங்காரம் செய்தார். ஆனால் சில நாட்களிலேயே கண் எரிச்சல் தொடங்கியது. இதனால் அவதிப்பட்ட அவர் டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற்றார். கண்ணை பரிசோதித்த டாக்டர் ஷெர்லி காலாவதியான கண் மையை பயன்படுத்தி இருப்பதாக கூறினார். இது 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. எனவே கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ...
Read More »65 ஆண்டு கால கொரிய போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – தென்கொரியாவை வலியுறுத்தும் வடகொரியா!
கொரிய போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான உடன்படிக்கையை தீவிரமாக செயல்படுத்தும்படி தென்கொரியாவை வடகொரியா அரசு வலியுறுத்தி உள்ளது. எலியும் பூனையுமாக இருந்த வடகொரியா, தென் கொரியா நாடுகளிடையே இருந்த போர்ப்பதற்றம் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு தணியத் தொடங்கியது. போரை முடிவுக்கு கொண்டு வந்து, இணக்கமாக செல்வற்கு வடகொரிய அதிபர் முன்வந்ததையடுத்து, ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இரு நாட்டு தலைவர்களிடையே வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் முன் ஜே இன் ...
Read More »செம்மணி புதைகுழி விவகாரம்- காவல் துறை ஒத்துழைப்பில்லை!
செம்மணியில் எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிரதேசத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையின் சட்ட மருத்துவ அதிகாரி நேற்றுப் பிரசன்னமானார். காவல் துறை குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை. மேலதிகஅகழ்வுப் பணிகளும் பரிசோதனைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீர்த்தாங்கி அமைப்பதற்காக செம்மணியில் கடந்த வெள்ளிக் கிழமை நிலம் அகழப்பட்டது. மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் வெளித்தெரிந்தன. அகழ்வுப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. யாழ்ப்பாணம்காவல் துறையினரக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை யாழ்ப்பாண மாவட்ட நீதிவான் சதீஸ்கரன் நேற்றுமுன்தினம் மாலை நேரில் சென்று பார்வையிட்டார். ...
Read More »நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தினால் வட மாகாண சபையில் குழப்பம் எழாது!-
நீதிமன்ற தீர்ப்பை உரிய முறையில் பின்பற்றினால் வட மாகாண சபையில் எவ்வித குழப்பங்களும் இடம்பெற மாட்டாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். நேற்று(21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளையில் எவ்வித குழப்பமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். நீதிமன்ற கட்டளையை சரியாக அமுல்படுத்தினால் எவ்வித குழப்பமும் இன்றி சுமுகமாக மாகாண ஆட்சி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பில் தௌிவின்றி இருப்பதாக வேண்டுமென்றே பாசாங்கு காட்டிக் கொண்டு ...
Read More »யாழ்ப்பாணத்தில் 93 கடற்படை முகாம்கள், 54 இராணுவ முகாம்கள்!
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போது 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம் என்பன இயங்குவதோடு 18 காவல் துறை நிலையம் உட்பட 30 காவல் துறை அலுவலகம் இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது வாழும் சுமார் 5 லட்சம் மக்கள் வாழும் குடாநாட்டில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடியை நம்பியே வாழும் நிலையில் கடற்படையினரே அதிக இடங்களை அபகரித்து நிலைகொண்டுள்ளமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் இன்றும் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இதிலும் குறிப்பாகக் குடாநாட்டைச் சூழ 93 முகாம்களில் ...
Read More »இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் வசதி!
ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் தளம் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில் அண்மையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் இசையைச் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, கேள்வி பதில் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஸ்டிக்கர் மூலம் கேள்வி கேட்க அழைப்பு விடுத்து அதற்கான பதிலை அளிக்கலாம். இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் உரையாடுவதற்கான சுவாரசியமான வழியாக இது அமையும் என இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடமும் கேள்வி கேட்டு விவாதத்தையும் தொடங்கலாம்.
Read More »
Eelamurasu Australia Online News Portal