சமுத்திரக்கனியின் ஆண் தேவதை!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆண் தேவதை வரும் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது.

இயக்குனர் தாமிரா இயக்கத்தில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், அறங்காங்கி நிஷா, சுஜா வருணி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆண் தேவதை.

உலகயமாக்கல், திருமண உறவுகள் மற்றும் நவீன உலகத்தில் குழந்தையை வளர்க்கும் சவால்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பை பார்த்தாலே தெரியும். இன்றைய சமுதாயத்தில், கணவன் இல்லாமல் வாழும் திருமணமான பெண்கள் சந்திக்கும் விளைவுகள் தான் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.