சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் முன்னேற்றகரமான மாற்றங்கள் உருவாகும் என்ற எண்ணம் இல்லாமல்போயுள்ளதாக ஐநாவின் இன்று வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநாவின் விசேட பிரதிநிதியாக சிறிலங்காவின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த பென் எமர்சன் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியான நீதிமன்ற நடைமுறைகளும் நல்லிணக்கமான சூழலும் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எந்தவித முன்னேற்றமும் இன்றி தங்கிநிற்பதாகவும் இன்னமும் கடுமையான சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் இருப்பதன் காரணமாக எதுவித விசாரணகைளுமின்றி பத்து வருடங்களுக்கு மேல் 12 பேர் இருப்பதாகவும் 70 பேர் ஐந்துவருடங்களுக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகவும் அவ்வறிக்கை கூறுகின்றது.
மேலும் கடுமையான சித்திரவதைகள் பற்றிய முறைப்பாடுகளை தன்னால் கேட்கமுடிந்ததாகவும் அவை பெற்றோல் நனைத்த பைகளால் முகத்தை மூடுதல் நகங்களை புடுங்குதல் ஊசிகளை நகங்களில் ஏற்றுதல் தண்ணீருக்குள் மூழ்கடித்தல் விரல்களுக்குள் வைத்து அமத்துதல் மற்றும் அந்தரங்க உறுப்புகளை சித்திரவதை செய்தல் போன்ற கொடூரங்களா அவை இருப்பதாகவும் அவரது அறிக்கை கூறுகிறது.
Source – https://www.theguardian.com/world/2018/jul/23/sri-lankan-reform-has-ground-to-a-halt-with-torture-used-freely-un?CMP=share_btn_tw